மோடி - ராகுல் லடாய் ஏன்?

புதுடில்லி: ராஜிவ் பற்றியும் அவரது ஆட்சிக் காலம் பற்றியும் மோடி கூறிய கருத்துகள், ராகுலையும் சோனியாவையும் அதிருப்தி அடைய வைத்துள்ளன.

நடந்தது என்ன1986ல் ஸ்வீடன் நாட்டிடம் இரு்நது 400 போபர்ஸ் பீரங்கிகள் வாங்க அப்போதைய ராஜிவ் தலைமையிலான காங்., அரசு ஒப்பந்தம் செய்தது. இதன் மொத்த மதிப்பு அப்போதே ரூ.ஆயிரத்து 437 கோடி.இந்த ஒப்பந்தத்தில் ரூ.68 கோடி லஞ்சம் கைமாறியதாக 1987, ஏப்.16ம் தேதி ஸ்வீடன் ரேடியோ செய்தி வெளியிட்டது. இதையடுத்து 1990ம் ஆண்டு ஜன.22ம் தேதி சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இடைத்தரகர்களாக வின் சத்தா, இந்துஜா சகோதரர்கள், ராஜிவுக்கு நெருக்கமான இத்தாலிய வர்த்தகர் ஒட்டாவியோ குட்ரோச்சி இருந்ததாக புகார் எழுந்தது.1991ல் கொலை செய்யப்பட்ட ராஜிவ், போபர்ஸ் வழக்கில் குற்றமற்றவராக டில்லி ஐகோர்ட்டால் அறிவிக்கப்பட்டார்.

மோடிக்கு கோபம் ஏன்கடந்த ஒரு ஆண்டாக மோடியை காவலாளி திருடன் என்று காங்., விமர்சனம் செய்து வருகிறது. இதனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த மோடி, மே 4ம் தேதி ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‛‛உங்கள் (ராகுல்) தந்தையை (ராஜிவ்) கை சுத்தமானவர் என்று உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் கூறினர். ஆனால் அவரது வாழ்க்கை ஊழல்வாதி நம்பர் 1 ஆக முடிந்துவிட்டது. அடுத்த கட்ட தேர்தல்களில் உங்கள் தந்தையின் (ராஜிவ்) பெயரைச் சொல்லி ஒட்டு கேட்க முடியுமா'' என்று சவால் விடுத்தார்.
இதற்கு பல காங்., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மோடி, ‛‛அவரைப் (ராஜிவ்) பற்றி ஒரு வார்த்தை சொன்னதற்கே உங்களுக்கு தேள் கொட்டியது மாதிரி இருக்கிறதே'' என்றார்.


மோடிக்கு நெருக்கமானவர்கள் இது பற்றி கூறும்போது, ‛‛மோடியை திருடன் என்று ராகுல் தொடர்ந்து கூறி வருவது மோடியை காயப்படுத்தி விட்டது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மோடி தான் காரணம் என்று உலகமே சொல்லும்போது மோடியின் நேர்மை பற்றி ராகுல் கேள்வி கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதனாலேயே சோனியாவின் கணவரும், ராகுல், பிரியங்காவின் தந்தையுமான ராஜிவ் பற்றி பேசி ராகுலை திருப்பித் தாக்க துவங்கினார் மோடி'' என்கின்றனர்.

மோடியின் தேர்தல் கணிப்புஇதுவரை தேர்தல் முடிந்துள்ள 425 தொகுதிகள் பற்றி மோடி கணித்துள்ளார். ஜாதி ரீதியாக எப்படி ஓட்டு விழுந்திருக்கும், முஸ்லிம்கள் எப்படி ஓட்டளித்திருப்பர், உ.பி.,யில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணிக்கு ஆதரவு கிடைத்திருக்குமா என்று அவர் ஆராய்ந்து பார்த்திருக்கிறார். இதில் முன், பின் வித்தியாசம் இருக்கலாம். இருப்பினும் எதிர்க்கட்சிகள் மீது எப்படியெல்லாம் அழுத்தம் கொடுக்கலாம் என்பதை மோடி நன்கறிவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)