மூன்றாவது அணி அமையுமா? சந்திரசேகர ராவ் அதிரடி வியூகம்

ஐதராபாத் : லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைக்க, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ், வியூகம் வகுத்துள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை, அடுத்தடுத்து சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.லோக்சபாவுக்கு, ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல்களே பாக்கி உள்ளன. அதுவும், வரும், 19ம் தேதியுடன் முடிந்து விடும். வரும், 23ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், 'தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மாநில கட்சிகளை ஒருங்கிணைந்து, மூன்றாவது அணி அமைத்து, ஆட்சி அமைக்கலாம்' என்ற ஆசை, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆலோசனைதேர்தலுக்கு முன்பே, இந்த முயற்சியை அவர் துவங்கினாலும், பல கட்சிகள், அவருக்கு ஆதரவு தரவில்லை. இதனால், தற்காலிகமாக அந்த முயற்சியை ஒத்தி வைத்திருந்த, சந்திரசேக ராவ், தற்போது, மீண்டும் துவங்கியுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயனை, நேற்று சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, அன்று மாலை சென்னை வரும், சந்திரசேகர ராவ், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, ஆலோசனை நடத்துகிறார்.இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான, குமாரசாமியுடன் பேச்சு நடத்தவும், அவர் முடிவு செய்து உள்ளார்.120 தொகுதி இது குறித்து, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பினராயி விஜயன், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து, சந்திரசேகர ராவ் பேச்சு நடத்தவுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து, இதில் பேசப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.சந்திரசேக ராவின் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான, கவிதா கூறியதாவது:லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ., அல்லாத பிற கட்சிகள், 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கணக்கிட்டுள்ளோம். மத்தியில், அடுத்த அரசை அமைப்பதில், இந்த கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, ஒருமித்த கருத்துடைய, மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, சந்திரசேகர ராவ், 10 நாட்களுக்கு மேலாக, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோவில்களில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)