ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் ஐக்கியம்

புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சியின், எம்.எல்.ஏ.,வான, தேவேந்திர சிங் ஷெராவத், நேற்று, பா.ஜ.,வில் இணைந்ததால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிஜ்வாசன் தொகுதியைச் சேர்ந்த, ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ., தேவேந்திர சிங் ஷெராவத், நேற்று, ஆம் ஆத்மியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
காந்தி நகர் தொகுதி, எம்.எல்.ஏ., அனில் பாஜ்பாயும், கடந்த வாரம், பா.ஜ.,வில் இணைந்த நிலையில், மற்றொரு, எம்.எல்.ஏ.,வும் ஓட்டம் பிடித்துள்ளது, ஆம் ஆத்மி தலைவர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.இது குறித்து, ஷெராவத் கூறியதாவது:சமீப காலமாகவே, ஆம் ஆத்மி தலைவர்கள், என்னை புறக்கணித்து வந்தனர். கட்சி நிகழ்ச்சிகளுக்கு, எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தொடர்ந்து அவமானப்பட முடியாது என்பதற்காகவே, பா.ஜ.,வில் இணைந்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)