வேலுாரில் தேர்தல் எப்போது?

வேலுார் : வேலுாரில் தேர்தல் எப்போது நடக்கும் என, ஆன்லைனில் சூதாட்டம் நடந்து வருகிறது.வேலுாரில், லோக்சபா தேர்தல் சமயத்தில், சிலரது வீடுகளில், கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வேலுாரில் தேர்தல் எப்போது நடக்கும் என, ஆன்லைனில் சூதாட்டம் நடந்து வருகிறது. இதில், வேலுார் லோக்சபா தொகுதியில் எப்போது தேர்தல் நடக்கும்; அ.தி.மு.க., - தி.மு.க., வில் யார் போட்டியிடுவர்; பழைய வேட்பாளர்களே போட்டியிடுவரா; புதியவர்கள் போட்டியிடுவரா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதற்கு சரியாக பதில் அளித்தால், கட்டும் தொகைக்கு இரண்டு மடங்கு தொகை வழங்கப்படும். இதற்காக, 5,000 ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, ஆன்லைனில், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.பின், அவர்களது இ - மெயிலுக்கு, கேள்விகள் அடங்கிய படிவம் அனுப்பப்படும். 10 நாளில் விடை அளிக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், சரியான விடை அளித்தவர்களுக்கு, அவர்கள் கட்டிய தொகையை விட, இரண்டு மடங்கு தொகை, அவர்கள் வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்படும்.மிகவும் ரகசியமாக நடந்து வரும், இந்த ஆன்லைன் சூதாட்டத்தில், ஏராளமானவர்கள் பணம் கட்டி, விடையளித்து வருகின்றனர். இது குறித்து, போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)