என் பெயர் சொல்லும் பிரியங்கா: ஸ்மிருதி

அமேதி : மத்திய அமைச்சரும் அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான ஸ்மிருதி இரானி, காங்., தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா மற்றும் காங்.,ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். பிரியங்கா அவரது கணவரின் பெயரை விட எனது பெயரை தான் அதிக முறை சொல்லிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமேதியில் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற காங்., முயற்சி செய்து வருகிறது. இது பற்றி டுவிட்டர் மூலம் நிர்வாகிகளை எச்சரித்ததுடன், தேர்தல் கமிஷனிடமும் புகார் அளித்து விட்டேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். ராகுலின் இத்தகைய அரசியலை தண்டிப்பதா அல்லது வேண்டாமா என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அமேதியில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் நிலையில், ராகுல் ஏன் தொகுதியில் இல்லை? என்றார்.முன்னதாக பிரியங்கா பற்றி பேசிய அவர், ராகுல் டிரஸ்டியாக இருக்கும் மருத்துவமனையில் ஒருவருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை இருந்தும் சிகிச்சை மறுக்கப்பட்டதால், அவர் உயிரிழந்துள்ளார். பிரியங்காவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக என் பெயர் கூட தெரியாது. ஆனால் இப்போது என் பெயரை விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் பிரியங்கா தனது கணவரின் பெயரை விட எனது பெயரை தான் அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றார்.
தொடர்ந்து , அமேதி தொகுதியில் காங்., க்கு தான் ஓட்டளிக்க வேண்டும் என அக்கட்சியினர் தன்னை கட்டாயப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீ டுவீட் செய்துள்ளார் ஸ்மிருதி இரானி.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)