எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை: லாலு பிரசாத் மூத்த மகள், 'மிசா' பாரதி சொல்கிறார்

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், இந்த தொகுதியில், 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். இந்த முறை உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?


இந்த தொகுதியின் தற்போதைய, எம்.பி., - பா.ஜ.,வின், ராம்கிருபால் யாதவ் போல, தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தொகுதியை எட்டிப் பார்ப்பவள் அல்ல நான். தொடர்ந்து பல முறை இங்கு வந்து, மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்துள்ளேன். இந்த முறை, எனக்குத் தான் வெற்றி.


மனெர் சட்டசபை தொகுதி, எம்.எல்.ஏ., பாய் பிரேந்திரா, இந்த தொகுதியில் போட்டியிட, 'சீட்' கேட்டு கொடுக்கப்படாததால், அவர், உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார் எனக் கூறப்படுகிறதே?
இல்லை. உண்மை என்னவென்றால், அண்ணன் பிரேந்திரா, இங்கு போட்டியிட விரும்பினார். கட்சி மேலிடம், எனக்கு சீட் வழங்கியதும், அதை ஏற்று, அவர் அமைதியாகி விட்டார். எனக்காக ஓட்டு சேகரித்து வருகிறார்; எதிர்ப்பு வேலை எதிலும் அவர் ஈடுபடவில்லை.உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. உங்கள் அப்பா, லாலு, சிறையில் உள்ளார். நீங்கள் கூட, வழக்கு ஒன்றில் ஜாமினில் உள்ளீர்கள்...
அந்த வழக்குகள் எல்லாம், பொய் வழக்குகள். அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்குகள். குறிப்பாக, பா.ஜ., மற்றும் நிதிஷ்குமார் அரசுகள் தொடர்ந்த வழக்குகளை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். உண்மை ஒரு நாள் வெல்லும். எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போட்டு, உள்ளே தள்ளுவது, மோடி அரசின் செயல் என்பது அனைவருக்கும் தெரியும்.லாலுவின் அரசியல் வாரிசு நீங்கள் தான் என்கிறீர்கள். ஆனால், உங்கள் தம்பி, தேஜஸ்வி, நான் தான் என்கிறார். உண்மையில், லாலுவின் அரசியல் வாரிசு யார்?லாலுவின் வாரிசுகளுக்குள்,எந்த சண்டையும் இல்லை.எல்லாம், ஊடகங்கள் கிளப்பி விடுபவை. மூத்தவள் என்பதால், நான் தான் அரசியல் வாரிசு என்றனர். நிதிஷ்குமார் அரசில் துணை முதல்வராக இருந்ததால், தேஜஸ்வியின் பெயர், மக்கள் மத்தியில் நின்று விட்டது. அதனால் அவரும், லாலுவின் அரசியல் வாரிசு தான் என்கிறார். அதையே நானும் ஏற்றுக் கொள்கிறேன். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை.
வரும், 2020 சட்டசபை தேர்தலில், ஆர்.ஜே.டி., வெற்றி பெற்றால், முதல்வர் பதவியை நீங்கள் கேட்க மாட்டீர்களா?கேட்க மாட்டேன். பீஹாரின் அடுத்த முதல்வர், தேஜஸ்வி தான் என, மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால், அவருக்கு என் ஆதரவை வழங்குவேன்.கட்சியில் முக்கிய பதவிகள் கேட்டு, உங்கள் சகோதர, சகோதரிகள் குடும்பத்தில் பிரச்னை செய்வதாக செய்திகள் வருகின்றனவே?அவ்வாறு எதுவும் இல்லை. தம்பிகள் தேஜஸ்விக்கும், தேஜ் பிரதாப்புக்கும் இடையே சண்டை எனக் கூறுவது, ஊடகங்கள் தான். சமீபத்தில் கூட, இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதுபோல, எங்கள் குடும்பத்தில் உள்ள பிறர், கட்சி பொறுப்புகளுக்காக போர்க்கொடி எல்லாம் துாக்கவில்லை.


நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்... ஆனால், ஷூகார் மற்றும் ஜெகானா பாத் தொகுதிகளில், தேஜஸ்வி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக, தேஜ் பிரதாப் பிரசாரம் மேற்கொள்கிறாரே?


இதெல்லாம், பா.ஜ., கிளப்பி விடும் வதந்திகள்.ஆர்.ஜே.டி.,யின் நட்சத்திர பேச்சாளர்கள், இந்த முறை தீவிர பிரசாரத்தில் ஈடுபடவில்லையே?தேஜஸ்வி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அவருக்கு கீழ், அனைத்து நட்சத்திர பேச்சாளர்களும், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கின்றனர். எனக்கும் கூட, அவர்கள், பாடலிபுத்ரத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவரின், ஒன்பது குழந்தைகளில், மூத்தவரான, மிசா பாரதி, 42, பீஹாரின், பாடலிபுத்ரா லோக்சபா தொகுதியில், அவர்கள் குடும்ப கட்சியான, ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.ஏற்கனவே, ராஜ்யசபா, எம்.பி.,யாக இருக்கும் அவர், கடந்த முறை, இந்த தொகுதியில் தோல்வி கண்டவர்.கடந்த, 1971ல், 'மிசா' எனப்படும், 'மெயின்டனன்ஸ் ஆப் இன்டர்னல் செக்யூரிட்டி' சட்டம் அமல்படுத்தப்பட்டு, லாலு உட்பட ஏராளமான அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் அரசால், சிறையில் அடைக்கப்பட்டனர். அதை நினைவுகூரும் வகையில், தன் மூத்த மகளுக்கு, 'மிசா' பாரதி என, லாலு பெயரிட்டுள்ளார். மிசா பாரதி போட்டியிடும் தொகுதியில், வரும், 19ல் தேர்தல் நடக்கிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)