தடையை மீறி பிரசாரம்: பிரக்யா சிங்குக்கு நோட்டீஸ்

போபால் : பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாகூருக்கு பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். எனவே, அவருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், போபால் மக்களைவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரக்யா சிங் தாகூர் போட்டியிடுகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறியிருந்தார்.

இதை அடுத்து பிரக்யா தாகூரை, 72 மணி நேரங்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால்,கடந்த 2ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பிரக்யா தாகூர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் பிரக்யா சிங் தாகூருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரக்யா, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர். எனவே, அவருக்கு பா.ஜ.,வில் 'சீட்' கொடுக்கப்பட்டதே பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)