ராகுல் நண்பருக்கு ஒப்பந்த சலுகை

புதுடில்லி : காங்., ஆட்சியின் போது பாதுகாப்பு துறை தொடர்பான ஒப்பந்தங்கள், காங்., தலைவர் ராகுலின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய நண்பருமான ஒருவருக்கு வழங்கப்பட்டது என பா.ஜ., தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.

அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராகுலின் மிடாஸ் தொடுதலில் எந்த ஒப்பந்தமும் பெரிதல்ல. அவரது தொழில் பங்குதாரர்கள் ஒப்பந்தம் பெற்றது குறித்து அவர் எப்போது பேசுவார். நாடு அதனால் எப்படி அவதிப்பட்டாலும் அவருக்கு அதுபற்றி கவலையில்லை என குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் இது தொடர்பாக ராகுலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது பதிலளித்த ராகுல், இந்த குற்றச்சாட்டுக்களை மத்துள்ளார். மேலும் அவர், அது பொது வெளியில் உரிய முறைப்படி நடந்தது. அரசு விரும்பினால் எந்த விசாரணை வேண்டுமானாலும் நடத்தட்டும். என் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்கட்டும். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அதே சமயம் ரபேல் ஒப்பந்தம் குறித்தும் தயது செய்து விசாரியுங்கள் என்றார்.

2002 ம் ஆண்டு, ராகுல் மற்றும் பிரியங்கா இயக்குனர்களாக இருக்கும் நிறுவனம் ஒன்று, பேக்ஆப்ஸ் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் துவங்கப்பட்டது. 2003 ம் ஆண்டு அந்நிறுவனம், அதே பெயரில் பிரிட்டனில் ராகுலின் 65 சதவீத பங்குகள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த உல்ரிக் மெக்நைட் உடன் இணைந்து மற்றொரு நிறுவனத்தை துவங்கியது.
2009 ல் ராகுல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தார். 2010 ல் இந்தியாவில் அந்நிறுவனம் வர்த்தகத்தை நிறுத்தியது. அதே சமயம், உல்ரிக் தொடர்ந்து அதே பெயரில் மற்ற நிறுவனங்களை நடத்தி வந்தார். 2011 ல் பிரெஞ்ச் கம்பெனியான டிசிஎன்எஸ் நிறுவனத்திற்கு இந்தியாவிற்கு 6 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் உல்ரிக்கிற்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதில் ராகுலின் பங்கு என்ன என தற்போது பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)