ராஜீவ் நம்பர் 1 ஊழல்வாதி : மோடி தாக்கு

லக்னோ : முன்னாள் பிரதமர் ராஜீவின் வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதியாகவே முடிந்தது என பிரதமர் மோடி காங்.,ஐ கடுமையாக தாக்கி பேசி உள்ளார். உ.பி.,யில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், உங்களின் தந்தை அவரது விஸ்வாசிகளால் மிஸ்டர் கிளீன் என புகழப்படலாம். ஆனால் அவரது வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதி என்றே முடிந்தது என்றார். 1980 களில் காங்., ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என கோர்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மோடி, எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். வாரிசுகள் நன்றாக, தெளிவாக கேட்டுக் கொள்ளட்டும், இந்த மோடி தங்க தட்டிலோ, ராஜ குடும்பத்திலோ பிறக்கவில்லை என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)