கல்லா கட்டும் தேர்தல் பறக்கும் படை

கரூர்:அரவக்குறிச்சி தொகுதியில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் இருக்க, பறக்கும் படை அலுவலர்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பில், பலத்த கவனிப்பு நடக்கிறது.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, இடைத்தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., மக்கள் நீதி மையம் உள்பட, பல கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஆட்களை பணம் கொடுத்து பிரசாரத்துக்கு அழைத்து வருவது, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுப்பது என, தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல், தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., கட்சிகள் துவக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருகின்றன.


வேட்பாளர்கள் பிரசாரத்தை முடித்து, செல்லும்போது, பறக்கும் படை அலுவலர்களுக்கும் பலமான கவனிப்பு நடக்கிறது. பிரச்சாரத்துக்கு செல்லும், தி.மு.க., - அ.தி.மு.க.,-அ.ம.மு.க., வேட்பாளர்களை, கண்காணிப்பதற்காக செல்லும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், எதையும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் தங்கள் வாகனத்தை விட்டு, இறங்குவது இல்லை.


இதனால், நன்னடத்தை விதிகள் காற்றில் பறப்பதாக, அரசியில் கட்சியினரே ஒருவரை ஒருவர் போட்டு கொடுக்கின்றனர்.அரவக்குறிச்சி தொகுதியில், அ.ம.மு.க., சார்பில், மாநில ஜெ., பேரவை தலைவர் சாகுல் அமீது போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன், இரண்டு நாட்களாக தொகுதியில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது, கிராமங்களில் இருந்து வாக்காளர்கள் வேன்களில் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தலா, 150 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், ஆரத்தி எடுக்க, பூர்ண கும்ப மரியாதை வழங்க தனியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.இந்நிலையில், மலைக்கோவிலுார் பகுதியில், திருச்சிமாநகர் மாவட்ட, அ.ம.மு.க., வினர், தினகரனுக்கு ஆரத்தி எடுக்க, கும்ப மரியாதை தர, புதிய சில்வர் தட்டு மற்றும் குடங்களை இலவசமாக வழங்கினர்.


அரவக்குறிச்சியில் குவிந்த வெளி மாவட்ட, அ.ம.மு.க.,வினரும், வாக்காளர்களுக்கு பணத்தை தராளமாக செலவிட்டு, பரிசு பொருட்களை வழங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)