முஸ்லிம் ஓட்டுகளை ஈர்க்க ராஜ்நாத்சிங் வியூகம்

புதுடில்லி: லக்னோ தொகுதியில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள முஸ்லிம் ஓட்டுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். இத்தொகுதியில் அவரை எதிர்ப்பது சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் நடிகர் சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா மற்றும் காங்., சார்பில் போட்டியிடும் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோர். பூனத்திற்கு ஆதரவாக அவரது மகளும் நடிகையுமான சோனாக்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இங்கு சமாஜ்வாதியை பகுஜன் சமாஜ் ஆதரிப்பது, காங்.,கிற்கு கிடைக்கும் ஓட்டுகளை ‛காவு' வாங்க காத்திருக்கிறது. ஆனால், மற்ற தொகுதிகளைப் போல் அல்லாமல் லக்னோவில் தன்னை சிறுபான்மையினர் ஆதரிப்பர் என்று ராஜ்நாத் நம்புகிறார். இந்த தொகுதி பா.ஜ.,வின் கோட்டை என்ற இன்னொரு காரணமும் ராஜ்நாத்துக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. 2014 தேர்தலில் இதே தொகுதியில் 2.72 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராஜ்நாத்.1991 முதல் இந்த தொகுதியை பா.ஜ., கையில் வைத்துள்ளது. இங்கிருந்து தான் 5 முறை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வெற்றி பெற்றார்.
2000 முதல் 2002 வரை உ.பி., முதல்வராக இருந்த ராஜ்நாத், தனக்கு எம்மதமும் சம்மதம் என்று காட்டும் வகையில் கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் சென்று வருகிறார்.

யோகியால் அதிருப்திசமீபத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்து ஒரு கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக ஷியா பிரிவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம்கள் தங்களை ஆதரிக்க வேண்டும் என்று மாயாவதி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த யோகி ஆதித்யநாத், ‛‛காங்.,கை அலிகள் (உ.பி.,யில் முஸ்லிம் என்று அர்த்தம்) ஆதரித்தால் எங்களை பஜ்ரங்பாலி (அனுமான் என்று அர்த்தம்) ஆதரிப்பர் என்று கூறி இருந்தார். இது ஷியா பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஷியா பிரிவில், முகம்மது நபிக்குப் பிறகு, இறை துாதராக அலி கருதப்படுகிறார். ஷியா பிரிவினர் எப்போதும் பா.ஜ.,வை ஆதரிப்பவர்கள்.

லக்னோ தொகுதியில் 6 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இங்கு 5வது கட்டத்தில் மே 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. யோகியின் கருத்தால் ஏற்பட்ட அதிருப்தியை களையும் முயற்சியாக ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் மதகுருமார்களை சந்தித்து வருகிறார் ராஜ்நாத்.ராஜ்நாத் கூறும்போது, ‛‛மோடியின் தலைமையின் கீழ் இந்தியா முன்னேறி வருகிறது. நான் 10 மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளேன். அங்கெல்லாம் மோடிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடே விரும்புகிறது'' என்கிறார்.

காங்.,கிற்குள் பூசல்இன்னொருபுறம் காங்., கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் ராஜ்நாத்துக்கு சாதகமாக இருக்கிறது. லக்னோவில் சத்ருகன் சின்கா பிரசாரம் செய்யவில்லை. தனது மனைவிக்காக மட்டுமே அவர் பிரசாரம் செய்கிறார். காங்., கட்சிக்குள் இருந்துகொண்டு இன்னொரு கட்சியில் இருக்கும் மனைவிக்காக சத்ருகன் பிரசாரம் செய்வதை, காங்., தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர். இதுவும் ராஜ்நாத்துக்கு ஓட்டுகளைப் பெற்றுத் தரும் என்கின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)