திட்டங்கள் உடனே நிறைவேற்றப்படும்: அமேதி வாக்காளர்களுக்கு ராகுல், 'ஐஸ்'

புதுடில்லி: 'மத்தியில், காங்கிரஸ் அரசு அமைந்தால், அமேதியில், பா.ஜ., அரசு நிறுத்தி வைத்துள்ள திட்டங்கள் உடனே துவக்கப்படும்' என, அத்தொகுதி வாக்காளர்களுக்கு, காங்., தலைவர் ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், வரும், 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

கடிதம்கடந்த, 2004 முதல், தொடர்ந்து இத்தொகுதியில் வெற்றி பெற்று வரும் ராகுல், இம்முறை அமேதி யிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அமேதியில், பா.ஜ., சார்பில், மத்திய ஜவுளித்
துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். ராகுல், நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தில், ஈடுபட்டு வருவதால், அமேதி தொகுதியில், அவரை ஆதரித்து, அவரது சகோதரி, பிரியங்கா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்,ராகுல், 'அமேதி என் குடும்பம்' என குறிப்பிட்டு, வாக்காளர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதன் விபரம்:மத்தியில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அமேதியில், பா.ஜ., அரசு நிறுத்தி வைத்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.அமேதி என் குடும்பம். உண்மையின் பக்கம் நிற்கும் துணிவை, அது எனக்கு அளித்துள்ளது. ஏழைகளின் வலி மற்றும் வேதனையை உணர்கிறேன். அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க, தொடர்ந்து குரல் கொடுப்பேன். இந்த நாட்டில், இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் சிறியவணிகர்கள் நலனுக்காக காங்கிரஸ் உழைக்கிறது. ஆனால், பா.ஜ., அரசு, 15 - 20 தொழிலதிபர்களுக் காக பாடுபடுகிறது.

கர்ம பூமிகாங்கிரஸ் அரசில், மக்கள் தான் ஆட்சியாளர் கள். ஆனால், பா.ஜ., அரசில், அனில் அம்பானிதான்
தலைவர்.உங்கள் ஆதரவுடன், இந்த நாட்டின் வடக்கு முதல் தெற்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை, ஒற்றுமையை ஏற்படுத்த முயன்று வருகிறேன். நாடு முழுவதும் ஆதரவை திரட்ட, என் கர்ம பூமியான அமேதி துணை நிற்கும்.மே 6ல், ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. உங்கள் குடும்ப உறுப்பினரை மீண்டும் தேர்வு செய்ய, ஓட்டளிக்க முன்வர வேண்டும். பொய்களை உருவாக்கும் தொழிற்சாலையாக விளங்கும், பா.ஜ., பணத்தை இறைத்து, வாக்காளர்களை கவர முயல்கிறது.அமேதி வாக்காளர்களின் பலம், உண்மை, நேர்மை, எளிமையில் அடங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)