தேர்தல் முடிவில் தமிழகத்திற்கு விடிவு காலம் :அழகிரி

சென்னை:'நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.



அவரது அறிக்கை:கடந்த லோக்சபா தேர்தலில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தாகக் கூறி, ஓட்டு கேட்க இயலாத பிரதமர் மோடி, மலிவான அரசியல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.



வரும், 23க்கு பின், பா.ஜ., ஆட்சி இருக்காது. 'மோடி பிரதமராக இருக்க மாட்டார்' என, ராகுல், கள நிலவரத்தின் அடிப்படையில் கூறியுள்ளார்.தேர்தல் பிரசாரத்தை திசை திருப்புவதற்காக, பிரதமர் மோடி எடுத்த முயற்சிகள், கடும் தோல்வி அடைந்து வருகின்றன. நாள்தோறும் வித விதமான உடைகளை அணிவதை போல, வித விதமான அவதுாறுகளைப் பரப்பி வருகிறார். இதையெல்லாம் கேட்டு, மக்கள் சலிப்படைந்து, கடுமையாக பாடம் புகட்டி வருகின்றனர்.



எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதேநேரம், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க., ஆட்சி இருக்காது. அ.தி.மு.க., உருக்குலைந்து, சிதறும் சூழல் ஏற்படும். ஆட்சி போன மறுநாளே, அ.தி.மு.க., கூடாரம் காலியாகி விடும். இதன் வாயிலாக, புதிய ஆட்சி அமைந்து, தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)