எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கியதும் அதில் சேர்ந்தவர், வி.எம்.சுப்பிரமணியன். எம்.ஜி.ஆர்., முதல்வரான போது, இவர், மானாமதுரை தனி தொகுதி எம்.எல்.ஏ., அதே போல, ஜெயலலிதா முதல்வர் ஆன போதும் இவர் தான் எம்.எல்.ஏ.,பந்தா இல்லாதவர்; கோஷ்டி சேர்க்காதவர். எப்போதுமே பஸ்சில் தான் போவார். தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவதில் கூட பாரபட்சமே கிடையாது. இவரது நேர்மையை, ஜெயலலிதா பாராட்டி இருக்கிறார்.
அந்த காலகட்டத்தில், மானாமதுரை தொகுதி அடங்கிய, சிவகங்கை மாவட்டத்தின் செல்வாக்கான அமைச்சர் ராஜ கண்ணப்பன். பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய முக்கிய துறைகள் அவரது கையில். அவர் தான் மாவட்ட செயலரும் கூட.எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் பஸ்சில் போவதை அறிந்த ராஜ கண்ணப்பன் கார் வாங்கி கொடுக்க முன்வந்தார்.
ஆனால், சுப்பிரமணியன், 'காரு நீங்க வாங்கி குடுத்துடுருவீங்க... பெட்ரோலு யாரு போடுவா?' என்று கேட்டு மறுத்து விட்டார். அப்போது, லிட்டர் பெட்ரோல் விலை, 28 ரூபாய். கடைசி வரை கார் வாங்காமலே இருந்து விட்டார்.இன்று விருப்ப மனு கொடுக்கவே, கார்கள் அணிவகுப்பில் வருகின்றனர்.
வாசகர் கருத்து