ராஜஸ்தானில் பாரத்பூர் யார் வசமாகும்?

மொத்தம், 25 லோக்சபா தொகுதிகளை உடைய ராஜஸ்தானில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம், 29ல் துவங்கிய தேர்தல், வரும், 6ல் நிறைவடைகிறது. இந்த நாளில் தேர்தலை சந்திக்க உள்ள, 12 தொகுதிகளில், பாரத்பூர் முக்கியமானது.


மன்னராட்சி காலத்தில், ஜாட் மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்த இந்த பகுதியில், இப்போதும், அடிக்கடி, 'போர்' நடக்கிறது. அன்னிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இல்லாமல், சொந்த மாநிலத்தவர்களுக்கு இடையே, அடிக்கடி தகராறு நடக்கிறது.ஜாட் இனத்தவர்களுக்கும், தலித் என, கூறப்படும், எஸ்.சி., பிரிவினருக்கும் இடையே, இங்கு அடிக்கடி மோதல் நடக்கிறது.எஸ்.சி., பிரிவினர் மட்டுமே போட்டியிடும் தனித் தொகுதியான இங்கு, ஜாதவ் எனப்படும், எஸ்.சி., பிரிவினர் அதிகம் வசிக்கின்றனர்.பிரபலங்கள்கடந்த, 2008ல் தான் இது, தனித் தொகுதி யானது. அதற்கு முன், ராஜஸ்தானின் பிரபலதலைவர்கள் பலர், இங்கு வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, காங்கிரசை சேர்ந்த, கே.நட்வர்சிங், ராஜேஷ் பைலட், ராஜ் பகதுார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.உத்தர பிரதேசத்தை ஒட்டியுள்ளதால், இந்த தொகுதியில், உ.பி., முன்னாள் முதல்வர், மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கு அதிகம். எனினும், கடந்த முறை நடந்த தேர்தலில், காங்கிரசிடம் இருந்து இந்த தொகுதியை, பா.ஜ., கைப்பற்றியது. அந்த தேர்தலில், ராஜஸ்தானின் அனைத்து தொகுதி களையும், மோடி அலை வீச்சால், பா.ஜ., கைப்பற்றியது. ஆனால், இந்த தேர்தலில் அலை எதுவும் வீசவில்லை. பா.ஜ., - எம்.பி., பகதுார் சிங் கோலிக்கு பதில், அவரின் மருமகள், ரஞ்சிதா கோலி போட்டியிடுகிறார். அவரை, காங்கிரசின், அபிஜித் குமார் ஜாதவ் எதிர்கொள்கிறார்.ஐ.ஆர்.எஸ்., எனப்படும், இந்திய வருவாய் பணியின், முன்னாள் அதிகாரியான, அபிஜித் ஜாதவ், அரசியலுக்கு புதியவர். அதையே, பா.ஜ., அவருக்கு எதிரான பிரசாரமாக கொள்கிறது. அதை வைத்து, அவரை எதிர்கொள்வது எளிது என்றாலும், உண்மையான போட்டி, பா.ஜ.,வுக்கும், பகுஜன் சமாஜ்கட்சிக்கும் இடையே தான் நிலவுகிறது.பகுஜன் கட்சியின், சூரஜ் ஜாதவ், தான் சார்ந்த, ஜாதவ் ஓட்டுகளை பிரிப்பார். அது, பா.ஜ.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, உள்ளூர் தேர்தல் கணக்காக உள்ளது.
அதே நேரத்தில், ஜாட் இனத்தவரின் ஓட்டு களை, காங்கிரஸ் வேட்பாளர் அள்ளுவார் என்ற நிலையும் உள்ளது. ஜாட் அரச குடும்பத்தை சேர்ந்த, அமைச்சர் விஷ்வேந்திர சிங் தலைமையில், ஜாட் இனத்தவர் ஓட்டுகள், காங்கிரசுக்கு செல்லும் எனவும் நம்பப்படுகிறது. விசுவாசம்தற்போதைய, காங்கிரஸ் முதல்வர், அசோக் கெலாட் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விஷ்வேந்திரா, கட்சிக்கு இப்போது விசுவாசமாக இருப்பார் என, நம்பப்படுகிறது.
ஏனெனில், இதற்கு முன் அவர், பா.ஜ., சார்பில், இந்த தொகுதியில், 1991 மற்றும் 96 தேர்தல்களில் வென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.இதற்கு முன், ஏழு முறை காங்கிரஸ்; ஐந்து முறை, பா.ஜ.; ஜனதா கட்சி மற்றும் சுயேச்சை தலா, இரு முறை வென்றுள்ளனர். மும்முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில், யார் வெல்வார் என்பது, தொகுதி மக்களுக்கே தெரியாத நிலை காணப்படுகிறது; எனினும், 23ம் தேதி தெரிந்து விடும்!

- ஆபா சர்மா -


சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)