பிரியங்காவுக்கு சிக்கல்; சோனியாவுக்கு கிடுக்கிப்பிடி

புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தின்போது நடக்கும் சில விஷயங்கள் சோனியாவுக்கும் அவரது மகள் பிரியங்காவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி.,யில் பிரசாரம் செய்து வரும் பிரியங்கா, சில இடங்களில் சிறுவர்களை சந்தித்துள்ளார். அப்போது சிறுவர்கள் மோடிக்கு எதிராக கோஷமிட்டபடி, தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தினர். வீடியோவில் சிறுவர்களின் செயலைப் பார்த்து பிரியங்கா சிரித்துக்கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
ஆனால், பிரதமர் பற்றி தவறான வார்த்தைகள் பேசிய சிறுவர்களை தான் கண்டித்ததாக பிரியங்கா கூறி உள்ளார்.
தேசிய சிறுவர் உரிமை பாதுகாப்பு கமிஷன் (என்.சி.பி.சி.ஆர்.,) விதிமுறைகளின்படி, தேர்தல் பிரசாரத்திற்கு சிறுவர்களை பயன்படுத்தக் கூடாது. எனவே, பிரசாரத்திற்கு சிறுவர்களை பிரியங்கா பயன்படுத்தியதாகக் கூறி, தேர்தல் கமிஷனுக்கு என்.சி.பி.சி.ஆர்., புகார் அனுப்பி உள்ளது.

சோனியாவுக்கும் சிக்கல்:நேரு - இந்திரா குடும்பத்திற்கு செல்வாக்கான தொகுதிகளாக கருதப்படுபவை அமேதியும் ரேபரேலியும். 2014 லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ரேபரேலியில் சோனியாவும் அமேதியில் ராகுலும் மட்டும் காங்., சார்பில் வெற்றி பெற்றனர் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இம்முறை இந்த இரு தொகுதிகளிலும் காங்.,- ஐ வெற்றி பெற விடக்கூடாது என்பதில் பா.ஜ., முனைப்பாக இருக்கிறது. இங்கு மே 6ம் தேதி ஐந்தாவது கட்டத்தில் நடக்கும் தேர்தலில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.
ராகுலுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பா.ஜ., நிறுத்தி உள்ளது. சென்ற தேர்தலில் ஸ்மிருதியை ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ராகுல் தோற்கடித்தார்.ரேபரேலியில் முன்னாள் காங்., பிரமுகர் தினேஷ் சிங் என்பவருக்கு பா.ஜ., சீட் கொடுத்துள்ளது. இவர் முன்பு சோனியாவுக்கு நெருக்கமாக இருந்துவிட்டு, இப்போது சோனியாவையே எதிர்த்து போட்டியிடுகிறார்.

பா.ஜ., பொறுப்பாளர்கள்:பா.ஜ.,வுக்கு ஆதரவாக பெரிய பெரிய தலைகள் இந்த தொகுதிகளில் முகாமிட்டுள்ளன. நாளை (மே 4) அமேதியில் அமித்ஷா பிரம்மாண்ட ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். ரேபரேலியில் பா.ஜ.,வின் தேர்தல் பி்ரசாரத்திற்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பொறுப்பேற்றுள்ளார்.
ரேபரேலியில் சினிமா நடிகர் சன்னி தியோலை வைத்து பா.ஜ., ஊர்வலம் நடத்துகிறது. கிராம தலைவர்கள், ஒன்றிய தலைவர்களையும் பா.ஜ., தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.ரேபரேலியில் சோனியாவை நேரடியாக குறிவைக்காத பா.ஜ., இதுவரை நடந்த 19 தேர்தல்களில் 16 முறை காங்., வெற்றி பெற்றும், எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கூறி பிரசாரம் செய்கிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)