பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வராது : ராகுல்

ஜெய்பூர் : நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவின் அடிப்படையில் மோடியும், பா.ஜ.,வும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதையே காட்டுகிறது என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் துவங்கியதற்கு பிறகு என்டிடிவி.,க்கு ராகுல் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ராஜஸ்தானில் பிரசாரத்திற்கு இடையே பேட்டி அளித்த அவர், நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது தெளிவாகி உள்ளது. கடந்த 4 கட்ட தேர்தல்களில் பதிவான ஓட்டுக்களின் அடிப்படையில் பார்த்தால் பா.ஜ., தேர்தலில் வெற்றி பெறாது. மோடியும், பா.ஜ.,வும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதையே அது காட்டுகிறது. 2019 தேர்தலுக்காக நாங்கள் நீண்ட காலம் எந்த திட்டமும் தீட்டவில்லை. மோடி நிச்சயமாக பிரதமர் ஆக மாட்டார் என்பது உறுதி.ஒட்டுமொத்த நாடும் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஆட்சிக்கு எதிராக உள்ளன. மிகப் பெரிய அளவில் வேலையின்மை, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு ஆகியற்றால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரியங்காவை பிரசாரத்திற்கு களமிறக்கிறது பா.ஜ.,வுக்கு சாதகம் என உங்களுக்கு யார் சொன்னது? உ.பி.,யில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி அல்லது காங்., இவற்றில் மதசார்பின்மை அமைப்பு வெற்றி பெறுவது உறுதி.நாங்கள் எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்களை பிரிக்கவில்லை. எங்கள் வேட்பாளர் பலமாக இல்லை என்றால், சமாஜ்வாதி அல்லது பகுஜன் சமாஜ் வேட்பாளர் வெற்றி பெற உதவுவோம். பா.ஜ.,வை வீழ்த்துவதே எங்கள் நோக்கம். பிரியங்கா மற்றும் ஜோதிராத்திய சிந்தியாவிடம் நான் கூறி விட்டேன் உ.பி.,யை பொறுத்தவரை பா.ஜ.,வை வீழ்த்துவதே நமது முக்கிய நோக்கம் என்று. ஒருவேளை எங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனால், நாங்கள் மெகா கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்.
நாங்கள் பா.ஜ.,வுக்கு உதவதாக கெஜ்ரிவால் கூறுவதை ஏற்க முடியாது. தமிழகம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் நாங்கள் கூட்டணி வைத்து போட்டியிடுகிறோம். டில்லியில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி வைக்க நான் தயாராக தான் இருந்தேன். ஆனால் எங்கள் கட்சி அதை ஏற்கவில்லை.சவ்கிதார் என்று மட்டுதான் நான் கூறினேன். சவ்கிதார் சோர் என்ற ஸ்லோகம் நான் துவங்கியது இல்லை. நாங்கள் மட்டுமல்ல இன்று நாட்டில் உள்ள 67 சதவீதம் பேர் ரபேல் ஒப்பந்தம் ஊழலானது என நம்புகிறார்கள். மோடி மீதான நேர்மையான அரசியல்வாதி, ஊழலுக்கு எதிராக போராடுபவர் என்ற எண்ணத்தை அது தகர்த்துள்ளது.
நான் கூறியது தவறாக புரியப்பட்டதாலேயே சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டேன். மோடியிடமோ அல்லது வேறு யாரிடமோ மன்னிப்பு கேட்கவில்லை. வாய் தவறி கூறியதற்காக மட்டுமே மன்னிப்பு கேட்டேன். ஆனால் சவுகிதார் சோர் முழக்கத்திற்காக மன்னிப்பு கேட்கவில்லை. பிரதமர், மக்கள் பணத்தை திருடி, அனில் அம்பானியிடம் கொடுத்தார் என்றே கூறினேன் என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)