தேர்தல் முடிவு என்ன..காங்கிரஸ் சந்தேகம்!

பா.ஜ.,வுக்கு எதிரானவர்கள், 'இந்த தேர்தலில், மோடி மண்ணை கவ்வுவார்; காங்கிரசின் ராகுல் தான் பிரதமர்ஆவார்' எனக் கூறுகின்றனர்.
அதுபோலவே, காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்களும் சொல்கின்றனர். சரி, நான்கு கட்ட தேர்தல் தான் முடிந்துள்ளதே, டில்லி, காங்., தலைமையகத்தில் உள்ள, தகவல் தொடர்புத்துறை தலைவர், பிரவீன் சக்ரவர்த்தியிடம் கேட்டுப் பார்ப்போம் என, அவரை அணுகினேன்.'தேர்தல் முடிவு, எப்படி பாஸ் இருக்கும்' என்றேன். 'ஒன்றும் கணிக்க முடிய வில்லை. மோடி அலை இல்லை; ராகுலுக்கும் ஆதரவு அலை இல்லை. மக்கள் எப்படி ஓட்டளித்துள்ளனர் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை. எனினும், உ.பி.,யில் இந்த முறை நாங்கள் சிறப்பாக வருவோம்; மொத்தமுள்ள, 80ல், 71 இடங்களை கைப்பற்றுவோம்' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)