சாமானியருக்கும் போட்டியிடும் வாய்ப்பு கிடைப்பது, அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே... ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில், 'சீட்' கிடைக்க வேண்டும் என்றால், இந்திய மாணவர் அமைப்பு, ஜனநாயக வாலிபர் சங்கம் என, 20 ஆண்டுக்கு குறையாமல் பணியாற்றி இருக்க வேண்டும்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இடைத்தேர்தல், மறக்கமுடியாத அரசியல் திருப்பமாகும். 2003ல், சாத்தான்குளம் இடைத்தேர்தல். அ.தி.மு.க., - காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி.வேட்பாளராக யாரை அறிவிக்கப்போகிறார் ஜெ., என, பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். நீலமேகவர்ணம் என்பவர் அறிவிக்கப்பட்ட போது, அவர் குக்கிராமம் ஒன்றில், விளம்பரம் எழுதுவதற்காக, சுவரில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார்.அவரை சந்தித்து, 'நீங்கள் தான் வேட்பாளர் 'என கூறிய போது, அவர் நம்பவில்லை. கட்சிக்காரர்களும் வியப்படைந்தனர். ஒ
ன்றிய செயலராக இருந்த நீலமேகவர்ணம், காங்., கட்சியின் வக்கீல் வேட்பாளர் மகேந்திரனுக்கு எதிராக வெற்றி பெற்றார்.சங்கரன்கோவில் தொகுதியிலும், சாதாரண நபரான கருப்பசாமி, 1996ல் வேட்பாளரானார். ஜெ., தோற்கடிக்கப்பட்ட அ.தி.மு.க., எதிர்ப்பு அலையிலும், வெற்றி பெற்றார் கருப்பசாமி. வெள்ளந்தியான மனிதரான கருப்பசாமி, அடிக்கடி சட்டசபையில் எம்.ஜி.ஆர்., பாடல்களை உரக்கப்பாடி ஜெ.,வை குலுங்க குலுங்க சிரிப்பில் ஆழ்த்துவார். 2012 ல் இறக்கும் வரை, நான்கு முறை அவர் தான் எம்.எல்.ஏ., ஒரு முறை அமைச்சரும் ஆனார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனை, 2001 தேர்தலில் தோற்கடித்த சக்திவேல்முருகன், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் மில் தொழிலாளி. இப்படி அடித்தட்டு மக்களையும் வேட்பாளராக நிறுத்தி ஜெயிக்க வைத்தது எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவின் தைரியம். 'சாமானிய முதல்வர்' இ.பி.எஸ்., எத்தகைய தைரியம் கொண்டவர் என்பதை சீக்கிரம் பார்க்கலாம்.
வாசகர் கருத்து