'விரைவில் தி.மு.க., ஆட்சி அமைக்கும்!'

சென்னை:''தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான அரசு அமையப் போகிறது,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.


சென்னையில், ம.தி.மு.க., சார்பில், மே தின விழா, நேற்று நடந்தது. பின், வைகோ அளித்த பேட்டி:விரைவில், தமிழகத்தில், தொழிலாளர் நலன் காக்கும் அரசாக, தி.மு.க., தலைமையிலான அரசு அமையப் போகிறது. அந்த உணர்வோடு, ம.தி.மு.க., செயல்படுகிறது. சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதிகளிலும், புதுச்சேரி உள்ளிட்ட, 39 தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில், அ.தி.மு.க., அரசை பாதுகாக்க, மூன்று, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.


ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் உள்ளிட்ட, நான்கு சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன், எந்த தலைவரைப் பற்றியும், தவறான கருத்தைப் பேசவில்லை. அவர் மீது ஆத்திரத்தை துாண்டும் விதத்தில், பா.ம.க., அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த செயலை வளர விடாமல், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தடுக்க வேண்டும்.பொது அமைதியும், சமூக நல்லிணக்கமும் அமையும் விதத்தில் செயல்பட, ராமதாசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)