அ.தி.மு.க., ஆட்சி தொடரும்: பிரேமலதா

சென்னை:''லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க.,வின் ஆட்சி தொடரும்,'' என, தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா கூறினார்.

சென்னையில், தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மே தின கொண்டாட்டம் நடந்தது. கட்சியின் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்த, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், இனிப்புகள் வழங்கினார். தொழிலாளர்களுக்கு ஆடைகளை வழங்கிய பின், பிரேமலதா அளித்த பேட்டி:


தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து, அனைவரும் காத்திருக்கிறோம். இந்த நேரத்தில், மூன்று, எம்.எல்.ஏ.,க்கள் மீது, கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., தரப்பில், சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை, சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.



நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு, முழு ஆதரவை வழங்கி உள்ளோம்.இந்த தொகுதிகளில் உள்ள கட்சியினர், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபட வேண்டும். தேர்தலில், முதல்வர், துணை முதல்வர், கடுமையாக பாடுபட்டு உள்ளனர்.

எனவே, அ.தி.மு.க., கூட்டணி, அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க.,வின் ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது. நான்கு தொகுதிகளில், அ.தி.மு.க.,விற்கு பிரசாரம் செய்ய வருமாறு, முதல்வர், இ.பி.எஸ்., கேட்டுள்ளார்; விஜயகாந்தும் அறிவுறுத்தியுள்ளார்.எனவே, இத்தொகுதிகளில், நான் பிரசாரம் செய்யஉள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)