தீயணைத்த ஸ்மிருதி பதறிய கிராமத்து மக்கள்

தேர்தலில் எந்தவொரு வாய்ப்பையும் தவற விட்டு விடக் கூடாது என்பது தான் அரிச்சுவடி. அதை நன்றாக அறிந்துள்ளார் உ.பி.யின் அமேதி தொகுதியில் காங்கிரசின் ராகுலை எதிர்த்து பா.ஜ. சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி.

மே 6ல் இங்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக தீவிர பிரசாரத்தில் ஸ்மிருதி ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவர் முன்ஷிகஞ்ச் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள குடிசை பகுதியில் தீ பிடித்து விட்டது என்பதை அறிந்தார். உடனே அவர் ஜீப்பை அந்த இடத்திற்கு ஓட்டிச் சென்று எரிந்து கொண்டிருந்த குடிசைகள் மீது மண்ணையும் தண்ணீரையும் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்; கூடியிருந்த கட்சியினரும் சேர்ந்து தீயணைத்தனர். இதனால் அந்த பகுதியினருக்கு ரொம்ப மகிழ்ச்சி. அது கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை.

'தேர்தலில் ஸ்மிருதி வெற்றி பெற்றால் தீப்பிடித்தால் உடனடியாக வந்து அணைப்பார்...' என தாமரை கட்சிக்காரர் ஒருவர் 'மைக்'கில் பேசினார். அதைக் கேட்ட அந்த கிராமவாசிகள் 'ஸ்மிருதி வருவார் என்பதற்காக இங்கு அடிக்கடி தீப்பிடிக்க வேண்டுமா...' என சண்டைக்கு சென்று விட்டனர்.

- கே.எஸ்.நாராயணன் -
நமது சிறப்பு நிருபர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)