பொறுப்பாளர்கள் நியமித்தார் கமல்

சென்னை : இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளுக்கு, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலுார் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது. நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில், நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தேர்தல் பணிகளை, அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றும் வகையில், பொறுப்பாளர்களை கமல் நியமித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, செயற்குழு உறுப்பினர் சவுரிராஜன் தலைமையில், எட்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். சூலுார் தொகுதிக்கு சினேகனும், அரவக்குறிச்சிக்கு சந்திரசேகரனும், தலைமை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)