அமேதியில் ராகுலை வீழ்த்த பா.ஜ. முழு கவனம்

புதுடில்லி: அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக தேர்தல் பிரசார பணிகளை பிரதமர் மோடியும், தேசிய தலைவர் அமித்ஷாவும் தினம் தினம் கூர்ந்து கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



இத்தொகுதியில், காங். தலைவர் ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலை போன்று அல்லாது இம்முறை ராகுலை வீழ்த்த பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது. ராகுல் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட மனு செய்த போது, ஸ்மிருதி இராணி கூறுகையில், கடந்த 15 நாட்களாக இத்தொகுதி எம்.பி.யான ராகுலை காணவி்ல்லை. அவர் அமேதி தொகுதி மக்களை ஏமாற்றிவிட்டு கேரளாவில் போட்டியிட சென்றுவிட்டார் என்று விமர்சித்தார்.


இந்நிலையில் நேற்று உ.பி. மாநிலம் அமேதி்க்கு உட்பட்ட புராப் தர்வா என்ற கிராமத்தில் வயல் வெளியில் திடீரென தீப்பிடித்தது. அங்கு பிரசாரம் செய்து கொண்டிருந்த ஸ்மிருதி சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த பொது அடி குழாயில் தண்ணீர் அடித்து கொடுத்து தீயை அணைக்க கிராமவாசிகளுக்கு உதவினார். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தக்க சமயத்தில் உதவிய ஸ்மிருதி இராணியை கிராமவாசிகள் வெகுவாக பாராட்டினர்.

எனவே அமேதி தொகுதியில் தேர்தல் பிரசார பணிகளை பா.ஜ.வினர் மட்டுமல்ல பிரதமர் மோடியும், தேசிய தலைவர் அமித்ஷாவும் தினம் தினம் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் ராகுலுக்கு கடும் சவால் கொடுத்து ஸ்மிருதியை எப்படியும் வெற்றியடையச் செய்ய பா.ஜ. மேலிடம் திட்டமிட்டுள்ளது. மேலும் ராகுலுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு யுத்திகளை பரப்பவும் திட்டங்களை வகுத்து வருகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)