மோடி மீது மம்தா காட்டம்

கோல்கட்டா : தாயை மதிக்காத மோடி எவ்வாறு நாட்டை மதிக்க போகிறார் என மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

கிழக்கு மிட்னாபுர் மாவட்டத்தில் உள்ள ஹிரியா பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா, தனது தாய் மற்றும் மனைவிக்கு எவ்வித மரியாதையும் அளிக்காதவர் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு எவ்வாறு மரியாதை அளிப்பார்? நாட்டிற்கு எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டும் என நீங்கள் கற்றுக் கொடுங்கள். இத்தகைய பிரதமரால் எந்த காலத்திலும் நாட்டின் நம்பிக்கையை பெற முடியாது. பிரதமரின் பேச்சுக்கள் அருவருக்கத்தக்க வகையிலும், மத பிரிவினையை தூண்டும் வகையிலும் உள்ளது.

பா.ஜ., தலைவர்கள் பொய்யர்கள், குண்டர்கள். முக்கிய பிரச்னைகளில் மக்களின் கவனத்தை திசை திருப்ப மத பிரசாரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மீண்டும் வந்தால் இனி தேர்தலே நடத்தப்படாது. இந்த நாட்டில் தாய்மார்கள், மகள்கள், சகோதரிகள் எவ்வாறு வாழ்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

மம்தாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க பா.ஜ., பொதுச் செயலாளர் சயன்தன் பாசு, பிரதமரை தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கி முதல்வர் பேசி உள்ளது வெட்க கேடானது. அவருக்கு அரசியல் ரீதியாக பிரதமரை தாக்கி பேசி ஒன்றும் இல்லை. அதனால் தான் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கி பேசுகிறார். இது மம்தாவின் பயத்தின் வெளிப்பாடு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)