பிரதமர் போட்டியில் முன்னணியில் 3 பேர்

மும்பை : பிரதமர் போட்டியின் முன்னணியில் தற்போதைய முதல்வர்களான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோர் உள்ளனர் என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அளித்துள்ள பேட்டியில், லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி தனி பெரும்பான்மை பெற தவறினால், அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில் மம்தா, சந்திரபாபு நாயுடு, மாயாவதி ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இந்த தேர்தலில் பா.ஜ., கூட்டணி தனிபெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. அதனால் பிரதமர் பதவிக்கு மம்தா, சந்திரபாபு நாயுடு, மாயாவதி இவர்களில் யாரையாவது தேர்வு செய்வதே சிறந்தது என்பது எனது கருத்து.
காங்., தலைவர் ராகுலை விட மாநில கட்சிகளை சேர்ந்தவர்கள் பிரதமர் பதவிக்கு சிறந்தவர்கள். தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்பதே ராகுலே பல தருணங்களில் தெளிவாக கூறி உள்ள போது, இது பற்றிய விவாதம் தேவையற்றது. இந்த தேர்தலில் பா.ஜ., 100 இடங்களை மட்டுமே பெறும், தனி பெரும்பான்மை கிடைக்காது. அதனால் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் நாம் இறங்க வேண்டும்.

தேசியவாத காங் 22 இடங்களில் போட்டியிடுகிறது. ஒருவேளை போட்டியிடும் 22 இடங்களிலும் வெற்றி பெற்றால், ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை இருக்காது. அதன் பிறகு பிரதமர் ஆவது குறித்து சந்திக்கலாம் என்றார். இது குறித்து மும்பையில் சந்திரபாபு நாயுடு கூறுகையில், பிரதமராக வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. எங்கள் கட்சியின் முதன்மை குறிக்கோள் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்பதே என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)