மோடிக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்லும் காங்.,

புதுடில்லி : தேர்தல் விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக கோர்டுக்கு செல்ல காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தேர்தல் கமிஷன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதாகவும், அதனால் தாங்கள் கோர்ட்டிற்கு செல்ல உள்ளதாகவும் காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்.,ன் அபிஷேக் மானு சிங்வி கூறுகையில், தேர்தல் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோர்ட்டுக்கு செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது. நாங்கள் அந்த வாய்ப்பை கையில் எடுக்க உள்ளோம். "மெகா போலீஸ் அதிகாரி" (தேர்தல் கமிஷன்) கண் தெரியாதது போல் கண்களை மூடிக் கொண்டுள்ளது. election commission, election omission ஆக மாறி விட்டது. மோடியும், அமித்ஷாவும் தேர்தல் விதிகளை மீறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

model code of conduct இப்போது Modi code of conduct என மாறி விட்டது. 3 பிரிவுகளின் கீழ் மோடியும், அமித்ஷாவும் தேர்தல் விதிகளை மீறி உள்ளனர். ஓட்டுக்களை திசை மாற செய்தல், பிரசார்திற்காக ராணுவத்தின் செயல்பாடுகளை பயன்படுத்தியது மற்றும் தேர்தல் நாளில் பிரசாரம் செய்தது. எங்களின் புகார்களின் அடிப்படையில் தேர்தல் விதிகளை மீறி பல தலைவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. அதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் மோடி மற்றும் அமித்ஷா மீது மட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)