பா.ஜ.,வில் 'மாஜி' ராணுவ அதிகாரிகள்

புதுடில்லி : நம் ராணுவத்தில் பணியாற்றிய, முன்னாள் அதிகாரிகள், ஏழு பேர், ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.ஓய்வு பெற்ற, முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஏழு பேர், பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர். அவர்களை, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.''இவர்களுடைய அனுபவம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சியில், கட்சிக்கு வழிகாட்டுதலாக இருக்கும்,'' என, நிர்மலா சீதாராமன் கூறினார்.பா.ஜ.,வில் இணைந்த, லெப்டினென்ட் ஜெனரல்கள், ஜே.பி.எஸ். யாதவ் மற்றும் எஸ்.கே. பட்யால், ராணுவத்தின் துணைத் தளபதிகளாக பணியாற்றியவர்கள்.
ராணுவ உளவு அமைப்பின், டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி, ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், ஆர்.என். சிங்; முன்னாள் டைரக்டர் ஜெனரல், லெப்டினென்ட் ஜெனரல், சுனித் குமார்; விங் கமாண்டர், நவ்னீத் மாகோன் உள்ளிட்டோரும், பா.ஜ.,வில் இணைந்து உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)