இறுதி ஆட்டம்!

கடந்த, ஐந்து ஆண்டுகளில், பா.ஜ., அனைத்து ஜனநாயக துாண்களையும், ஒவ்வொன்றாக அழித்து வந்துள்ளது. பா.ஜ., ஆட்சியின் இறுதி கட்டம் துவங்கிவிட்டது. 'மகாகட்பந்தன்' எனப்படும், மெகா கூட்டணியின் அரசு, விரைவில் அமைய உள்ளது.
அகிலேஷ் யாதவ் , தலைவர், சமாஜ்வாதி .,
அரசியல் ஆதாயம்!
மஹாராஷ்டிராவில், முந்தைய ஆட்சியில், 70 ஆயிரம் கோடி ரூபாய், ஊழல் நடந்ததாக, பா.ஜ., தலைவர், அமித் ஷா கூறியுள்ளார். தற்போது மாநிலத்தில், உங்களுடைய ஆட்சிதானே உள்ளது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். உண்மையில் ஊழல் நடந்ததா அல்லது அரசியல் ஆதாயம் தேட பொய் புகார் கூறப்பட்டதா?
ராஜ் தாக்கரே , தலைவர், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா.,
முயற்சி பலிக்காது!
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கு, அண்டை நாடான பாகிஸ்தான் முயற்சிக்கிறது; அதற்கு அனுமதிக்க மாட்டோம். பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்த உடன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நீக்குவோம்.
அமித் ஷா , தேசிய தலைவர், பா.ஜ.,



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)