ஜின்னாவை புகழ்ந்த சத்ருகன் சின்ஹா

பாட்னா:பாக்., பிரிவினைக்கு காரணமான, முகமது அலி ஜின்னாவை, பீஹார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதி, காங்., வேட்பாளர், சத்ருகன் சின்ஹா, பாராட்டி பேசியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


பீஹார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதியில், கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர், நடிகர் சத்ருகன் சின்ஹா. மத்திய அமைச்சர் பதவி வழங்காததால், பிரதமர் மோடியை, கடந்த, ஐந்து ஆண்டு களாக, கடுமையாக விமர்சித்து வந்தார்.

பிரசாரம்அதனால், இம்முறை, தேர்தலில் போட்டியிட, சத்ருகனுக்கு, பா.ஜ., வாய்ப்பளிக்கவில்லை.இதையடுத்து, சத்ருகன், சமீபத்தில், காங்கிரசில் சேர்ந்தார். அதே பாட்னா சாஹிப் தொகுதியில், காங்., சார்பில், போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா தொகுதியில், காங்., சார்பில், போட்டியிடும். அம்மாநில முதல்வர், கமல்நாத்தின் மகன், நகுல்நாத்தை ஆதரித்து, சத்ருகன் சின்ஹா, நேற்று பிரசாரம் செய்தார்.

பரபரப்புஅப்போது, 'நாட்டின் சுதந்திரத்திலும், வளர்ச்சியிலும், காங்கிரசின் பங்கு மகத்தானது; மஹாத்மா காந்தி, சர்தார் படேல், நேரு, முகமது அலி ஜின்னா, நேதாஜி, இந்திரா, ராஜிவ் என, காங்கிரஸ் தலைவர்கள் பலரும், நாட்டுக்காக பெரும் தியாகம் செய்துள்ளனர். அதனால் தான், காங்.,கில்சேர்ந்தேன்' என்றார்.

பிரிவினைக்கு காரணமான, ஜின்னாவை, சத்ருகன் பாராட்டி பேசியது, பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.இந்நிலையில், சத்ருகன், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'மவுலானா அபுல் கலாம் ஆசாத் என, கூறுவதற்கு பதில், முகமது அலி ஜின்னா எனக் கூறிவிட்டேன்' என, விளக்கம் அளித்திருந்தார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)