மதுரை தேர்தல் அதிகாரியை மாற்ற ஐகோர்ட் இடைக்கால உத்தரவு

சென்னை : தேர்தல் அதிகாரியும் மதுரை மாவட்ட கலெக்டருமான நடராஜனை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.


மதுரையில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான் என்று தமிழக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளது
nsmimg687064nsmimg
மதுரை ஓட்டு எண்ணும் மையத்தில், அத்துமீறி தாசில்தார் சம்பூர்ணம் என்பவரும், அவருடன் சிலரும் நுழைந்தனர். ஆவணங்களை எடுத்துச்சென்றனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. மா.கம்யூ., இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், தாசில்தார் உள்ளிட்ட சிலரை சஸ்பென்ட் செய்த நிர்வாகம், மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மீது நவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மா.கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன் வழக்கு தாக்கல் செய்தார். அது நீதிபதிகள் மணிக்குமார், சுப்பரமணியம் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு அளித்த பதிலில், ''மதுரை ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான். தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் ஒரு தபால்காரர் போலத்தான். எனவே மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது,'' என்று தெரிவித்திருந்தது.

இந்த பதிலை ஏற்காத நீதிபதிகள், எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள். வட்டாட்சியருக்கு உள்ள அதிகாரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா; தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரியும் வேறு வேறு அல்ல. தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை தெரிந்தே மாவட்ட தேர்தல் அதிகாரி அத்துமீற அனுமதித்துள்ளார். இப்படி இருந்தால் எப்படி தேர்தலை நியாயமாக நடத்த முடியும், '' என்று சரமாரியாக குற்றம்சாட்டினர்.
பின்னர், 2 நாட்களுக்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் பதில் மீது முடிவெடுப்பதாக கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி மாற்றம்?இந்நிலையில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான நடராஜன் இடம்மாற்றம் செய்ய வேண்டும், உதவி தேர்தல் அதிகாரி மற்றும் காவல்உதவி ஆணையரையும் இடம் மாற்றம் செய்ய வேண்டும் , அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது.

மதுரை தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, உதவி ஆணையர் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், வழக்கு ரீதியாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு வசாரணை வரும் ஏப்ரல் 30 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை தேர்தல் அதிகாரி நாகராஜன் நியமனம்மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நாகராஜனை நியமித்தது தேர்தல் ஆணையம். தேர்தல் நடத்தும் உதவி அலுவலராக சாந்தகுமார் நியமனம் செய்யப்பட்டார். புதிய அதிகாரிகள் நியமனம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)