டிரெண்டிங்கான மோடியின் படம்

புதுடில்லி : அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதலின் காலை தொட்டு பிரதமர் மோடி ஆசிபெற்ற போட்டோ டுவிட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நேற்று (ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க சென்ற மோடி, 93 வயதாகும் பிரகாஷ் சிங் பாதலின் கால்களை தொட்டு வணங்கி, ஆசி பெற்றார். இதே போன்று வேட்புமனு தாக்கல் அறையில் தனது பெயரை முன்மொழிந்த பெண்கள் கல்லூரி முதல்வரும் 92 வயதானவருமான அன்னபூர்ணா சுக்லாவின் கால்களை தொட்டு ஆசி பெற்றார்.இந்த படங்களை டுவிட்டரில் வைரலாக்கி, டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள். இந்த ஆண்டின் மிகச் சிறந்த புகைப்படம் இது தான் என பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். அத்துடன், காங்.,ல் இது போன்ற கலாச்சாரங்களையும், மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மோடி, பாதலிடம் ஆசி பெறும் போட்டோவையும், காங்.,ல் ராகுல் மற்றும் சோனியாவின் கால்களில் மூத்த தலைவர்கள் பலர் விழுந்து ஆசி பெறும் போட்டோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)