அமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு

புதுடில்லி: தமிழகத்தில் மே 19 அன்று நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில், தினகரனின் அமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலின் போது தேர்தல்ஆணையம் அமமுகவிற்கு பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கி இருந்தது. தொடர்ந்து ஓட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடை தேர்தல் வரும் மே மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில்போட்டியிடும் அமுமக கட்சி தங்களுக்கு இடைத்ததேர்தலில் பரிசுபெட்டி சின்னத்தையே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.மேலும் தேர்தல்ஆணையத்தில் அமமுகவை கட்சியாக பதிவு செய்யவும் விண்ணப்பித்திருந்தனர். இதை தொடர்ந்து அமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)