நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை : மே 19 அன்று நடைபெறும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில், மீதமுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 அன்று நடக்கிறது. இதற்கு தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதில், சூலுார் தொகுதியில் வழக்கறிஞர் விஜயராகவன், அரவக்குறிச்சியில் செல்வம், திருப்பரங்குன்றத்தில் ரேவதி மற்றும் ஒட்டப்பிடாரத்தில் அகல்யா ஆகியோர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர், என்று குறிப்பிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)