ராஜஸ்தானில் பங்காளி சண்டை கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள மோதல்

ராஜஸ்தான் மாநிலம், சிகார் தொகுதியில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய, எம்.பி., யும், முறையே, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனால், இங்குபங்காளிச் சண்டைஏற்பட்டுள்ளது.ஜாட்சிகார் லோக்சபா தொகுதியில், 16 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில், ஏழு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. நான்கு முறை பா.ஜ.,வும், தலா ஒரு முறை ராம் ராஜ்யபரிஷத், ஜன சங்கம் கட்சி களும், மூன்று முறை ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.இந்த தொகுதியில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். அதனால், ஹிந்துத்வா கொள்கை சார்ந்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர்.மாஜி மந்திரி, 'பலே'பா.ஜ., சார்பில், 1998, 1999 மற்றும் 2004 ஆகிய மூன்று தேர்தல்களில், முன்னாள் மத்திய அமைச்சர் சுபாஷ் மஹாரியா, தொடர்ந்து வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு தேர்தலில், மஹாரியாவை, காங்., வேட்பாளர், மஹாதேவ் சிங் கண்டேலா தோற்கடித்தார். பின், 2014ல் மோடி அலை ஏற்படுத்திய தாக்கத்தின் போது, மஹாரியாவுக்கு, பா.ஜ.,வில், 'சீட்' தரவில்லை.மாறாக, ஆரிய சமாஜத்தின் முன்னணி நிர்வாகியாக இருந்த, சாமியார் சுமேதானந்த் சரஸ்வதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர்தான் தற்போது, எம்.பி.,யாக உள்ளார். சீட் கிடைக்காத அதிருப்தியில் மஹாரியா சுயேச்சையாக தேர்தலில் நின்று, 1.88 லட்சம் ஓட்டுகள் பெற்றார். இவர், காங்கிரசுக்கு அடுத்தபடியாக, மூன்றாம் இடம் பெற்றார்.கட்சி தாவல்கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால், பா.ஜ.,வில் மஹாரியாவை ஓரங்கட்டினர். இதையடுத்து, 2016ல் அவர் காங்கிரசில் சேர்ந்தார். மே, 6ல் நடக்க உள்ள, இந்த தேர்தலில், அவர் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ளார். பா.ஜ.,வின் சுவாமி சுமேதானந்த் சரஸ்வதி, மீண்டும் வேட்பாளராகியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், அம்ரா ராம் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், 2014 தேர்தலில் போட்டியிட்டு, நான்காம் இடம் பெற்றவர். பல முறை சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றாலும், லோக்சபாதேர்தலில் இவரால் இதுவரை ஜெயிக்க முடியவில்லை.இந்த முறை, சுபாஷ் மஹாரியாவுக்கும், பாபாஜி என அழைக்கப்படும், சுமேதானந்த் சரஸ்வதிக்கும் இடையே, நேரடி போட்டி உள்ளது. இரு தரப்பினரும், விவசாயிகள் மற்றும் ராணுவ குடும்பத்தினரை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தலில், விவசாயிகளின் பிரச்னையால், பா.ஜ.,வுக்கு பல இடங்களில் தோல்வி கிடைத்தது. அந்த நிலை தற்போது இருக்க கூடாது என, ராஜஸ்தான் மாநில நிர்வாகிகளை, பா.ஜ., மேலிடம்அறிவுறுத்தியுள்ளது ஓட்டு கேட்கும் வழிவிவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு போன்றவற்றை, காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிரசாரம் செய்கின்றன. புல்வாமாவில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கான பதிலடி, ராணுவத்தினருக்கு ஒரேபென்ஷன் திட்டம் வந்தது, சிகார் தொகுதியில் அகல ரயில் பாதை திட்டம் அமல்படுத்தியது போன்றவற்றை, பா.ஜ., தங்கள் சாதனைகளாக கூறி வருகிறது. குறிப்பாக தேசபக்தி, தேசத்துக்கு எதிரான கொள்கை யுள்ளவர்கள் என்ற பிரசாரத்தை, ராஜஸ்தான் பா.ஜ., நம்பியுள்ளது.
. - ஏ.சர்மா -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)