ஓட்டுச்சாவடி அருகே வெடிகுண்டுவீச்சு

கோல்கட்டா: 3ம் கட்டமாக தேர்தல் நடக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், முர்ஷிதாபாத் மாவட்டம் ராணி நகர் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோதல்



முர்ஷிதாபாத் மாவட்டம் பலிகிராம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஓட்டளிக்க வரிசையில் நின்ற வாக்காளர் ஒருவர் உயிர் இழந்தார்.

முகவர் மர்ம மரணம்



தக்ஷின் தினாஜ்பூர் பகுதியில், பாபுலால் முர்மு என்ற தேர்தல் முகவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)