ஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார்

புதுடில்லி: நாடுமுழுவதும் இன்று 3 ம் கட்ட லோக்சபா தேர்தல் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. கேரளாவில் பல இடங்களில் ஓட்டு மின்னணு இயந்திரங்கள் பழுதானது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். சில சாவடிகளில் காலதாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. கேரளாவில் சபரிமலை விவகாரம் இந்த தேர்தலில் முக்கிய விவாத பொருளாக உள்ளது. கேரளாவில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சசிதரூர் புகார் அளித்தார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கவலை தெரிவித்துள்ளார். ஓட்டு இயந்திரம் பழுது பா.ஜ.,வுக்கு ஓட்டு செல்வாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அவரது டுவிட்டரில்;

மின்னணு இயந்திரத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டு விழுவதாக செய்தி வருகிறது. இது கோளாறா அல்லது பா.ஜ.,வுக்கு ஓட்டா , தேர்தலுக்கென பல ஆயிரம் கோடி செலவு வீண். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்று நடக்கும் மூன்றாம் கட்ட ஓட்டுப் பதிவு, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களில் உள்ள, 116 தொகுதிகளில் நடக்கிறது. இன்றுடன், மொத்தமுள்ள, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 22ல் தேர்தல் முடிகிறது.

15 மாநிலங்கள்
குஜராத், கேரளா உட்பட, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 116 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடக்க உள்ளது. குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளும் இன்று தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளிலும், ஜனநாயகக் கடமையாற்ற மக்கள் காத்திருக்கின்றனர். கர்நாடகாவில் மொத்தம்உள்ள, 28 தொகுதிகளில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. மஹாராஷ்டிராவில், 14, உ.பி.,யில், 10 தொகுதிகளும் தேர்தலை சந்திக்கின்றன. ஏற்கனவே முதல் கட்டத்தில், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்டத்தில் நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ளது. மொத்தம் நடக்கும் ஏழு கட்டங்களில், மூன்றாவது கட்டத்தில் தான், மிகவும் அதிகபட்சமாக, 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.


23-ஏப்-2019 21:19 Report Abuse
ஸாயிப்ரியா வரப்போகும் ரிசல்ட்டிற்கு இப்போதிலிருந்தே காரணம் தேடுகிறார்கள். உள்ளூர உதறல்.
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஏப்-2019 20:35 Report Abuse
Krishnamurthy Venkatesan MOCK POLL HAS BEEN DONE INFRONT OF BOOTH AGENTS. THE FUNCTIONING OF THE BU, CU, VVPAT HAVE BEEN CHECKED THOROUGHLY. THE BOOTH AGENTS HAVE ALSO SIGNED THE MOCK POLL CERTIFICATE AS THE TEM IS CORRECT. TOTAL VOTES POLLED AND ITS CORRECTNESS DURING MOCK POLL IS VERIFIED BY 1. CHECKING TOTAL POLLS VOTED BY PRESSING TOTAL BUTTON, 2. CROSS CHECKED FROM VVPAT VOTE SLIP AND COUNTED THE SLIP AND IT IS ALSO TALLYING. 3. THE POLLING OFFICERS ALSO NOTED THE VOTE ED CANDIDATEWISE MANUALLY AND CHECK THE CORRECTNESS. WHEN ALL THE THREE PROCESS ARE FOUND TO BE CORRECT AND THE BOOTH AGENTS ACCEPTED ITS CORRECTNESS, THE QUESTION OF MALL FUNCTIONING (ALL VOTES GO TO BJP) OF THE EVM DOES NOT ARISE AND BASELESS.
dinesh - pune,இந்தியா
23-ஏப்-2019 18:38 Report Abuse
dinesh Athu kolaaru illappaa. Unga ethirkaalam patriya peethi.
விவசாயி - Tiruppur,இந்தியா
23-ஏப்-2019 18:08 Report Abuse
விவசாயி இங்கே ஒரு விஞ்ஞானி சொல்வதுபோல EVM மிஷினில் வேட்பாளர்களை செட் செய்வது மத்திய அரசு அதிகாரிகள் அல்ல.. அனைத்து கட்சி வேட்பாளர்கள் அல்லது அவர்களின் ஏஜெண்ட்கள் முன்னிலையில் அந்த இயந்திரத்தில் சீல் வைக்கும்போது அனைவரிடமும் கையெழுத்துப் பெறப்படும்.......இவை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் அப்படியே இருக்கும்.........தேர்தல் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொண்டு இவ்வாறு கருத்துக்களை போடவும்.... இல்லை உங்கள் ஊரில் உள்ள உங்களுக்கு பிடித்த கட்சியின் ஏஜெண்டிடம் விவரம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.......
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஏப்-2019 17:13 Report Abuse
Natarajan Ramanathan புகழ் பாவம் பப்பு மாதிரி விபரம் பத்தாமல் இருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் எனது நண்பர் தான் தேர்தல் அதிகாரி. அவருக்கு எந்தெந்த கட்சியில் யார் வேட்பாளர்கள் என்றுகூட தெரியாது. எல்லாம் தேர்தல் கமிஷன் சட்டப்படி மிகவும் நேர்மையாக நடப்பதாக கூறினார்.
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
23-ஏப்-2019 16:50 Report Abuse
Mohamed Ilyas கோளாறு சரி அதென்ன தவறாக விழும் வோட்டு எல்லாம் தாமரைக்கே விழுது , அங்கே தான் கேள்வி எழுகிறது ஒரு முறை கூட மாற்றி வேறு சின்னத்திற்கு விழ மாட்டேன் என்கிறது அது ஏன்?
S Lakshmana Kumar - thiruvarur,இந்தியா
23-ஏப்-2019 15:32 Report Abuse
S Lakshmana Kumar இப்போ எல்லாம் ஒரு பேஷன் ஆகி போச்சு. மெஷின் மேல குத்தம் சொல்வது. கோயபல்ஸ் விதி தான். ஒரு பொய்ய திரும்ப திரும்ப சொன்னா அதுவே உண்மையாகிவிடும். நாம் இருப்பது மிகப்பெரிய ஜனநாயகம். தொன்னுத்தி ரெண்டு கோடி பேர் ஒட்டு போடணும். ஒட்டு சீட்டு அச்சடிப்பது பெரிய வேலை. ஒட்டு பேட்டி மாத்தல் தான் ஓட்டு மெஷின்க்கு வித்திட்டது. கொஞ்சம் சிந்தியுங்கள்.
sundar - chennai,இந்தியா
23-ஏப்-2019 15:31 Report Abuse
sundar அப்போ 2004 2009 காங்கிரஸ் வோட்டிங் மெஷின் செட்டிங்கில் வெற்றி பெற்றதா ? 2014 ஒன்பது கட்ட தேர்தலில் காங்கிரஸ் செட்டிங் பண்ண மறந்துவிட்டதா ? இல்லை ஊழல் பணத்தை எண்ணுவதில் இதில் கவனம் செலுத்த வில்லையா ? போயா போக்கத்த ஆளு கருத்து சொல்ல வந்துட்டாரு வேட்டிய மடிச்சு கட்டிக்கிட்டு
Achchu - Chennai,இந்தியா
24-ஏப்-2019 05:47Report Abuse
Achchuஊழல் பணத்தை எண்ணுவதில் பிசி என்றால் மதிப்பிழப்பு செய்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி எண்ணி முடிப்பது எக்காலம்? மதிப்பிழப்பு செய்த அந்த தேதிக்கு முன்பும் இன்றும் புழக்கத்திலுள்ள நோட்டுகள் மதிப்பை வெளியிட தயாரா?...
Anand - chennai,இந்தியா
23-ஏப்-2019 15:26 Report Abuse
Anand தேர்தல் முடிவுகள் வந்தபிறகு ஏன் எதற்க்காக தோற்றோம் என கூற காரணங்களை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூற இப்பவே ஒரு துண்டை போட்டுவிட்டார்கள் இந்த களவாணி பயல்கள் கூட்டம்...
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஏப்-2019 16:09Report Abuse
Endrum Indianஅது தான் உண்மை....
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஏப்-2019 14:58 Report Abuse
Pugazh V வோட்டிங் மெஷின் ஸெட் பண்ணுவது பாஜக அடிமை ம. அரசு அதிகாரிகள் தான். இத்தனை எலக்ஷன் நடந்து விட்டது. இன்னும் இதுகூடத் தெரியாதா அல்லது நடிப்பா? 3ஆம் கட்ட தேர்தல் மோ__ க்கு முக்கியமான தேர்தல் என்று செய்தி நேற்று வந்தப்பவே எதிர்பார்த்தது தான் இது
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
23-ஏப்-2019 15:19Report Abuse
HSRஇங்க கூடத்தான் குறை சொல்ல எத்தனையோ பேரு காத்து கிடக்கானுங்க. என்ன ஆச்சு சும்மா நச்சுன்னு தேர்தல் அமைதியா நடந்தது....
Sittu Kuruvi - covai,இந்தியா
23-ஏப்-2019 15:55Report Abuse
Sittu Kuruviபூத் ஏஜென்ட்கள் எல்லாம் எங்க போவீங்க, இப்போ கூட அங்கேயே இருந்து பாதுகா வக்கில்லாதவன்லாம் எதுக்கு கட்சி நடத்துற...
Nermaiyanavan - Tamilnadu,இந்தியா
23-ஏப்-2019 16:04Report Abuse
Nermaiyanavan...
மேலும் 29 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)