நான்கு தொகுதி இடைத்தேர்தல்அ.ம.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை : இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அ.ம.மு.க., வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, தி.மு.க., ஏற்கனவே அறிவித்துள்ளது.இதைதொடர்ந்து, அ.ம.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலர், தினகரன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு:சூலுார் தொகுதியில், கோவை புறநகர் மாவட்ட செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான, சுகுமார்; அரவக்குறிச்சியில், அம்மா பேரவை தலைவர், சாகுல் ஹமீதும் போட்டியிடுகின்றனர்.திருப்பரங்குன்றம் தொகுதியில், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான, மகேந்திரன்; ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில், துாத்துக்குடி வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான சுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.இவ்வாறு, தினகரன் அறிவித்துள்ளார்.


Bhaskaran - Chennai,இந்தியா
23-ஏப்-2019 06:45 Report Abuse
Bhaskaran தினகரன் கொடுக்கும் பலகோடிகளில் கொஞ்சம் செலவழித்துவிட்டு மீதியை பத்திரமாக ஒதுக்கிவிடுவார்கள்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)