ஒரு இடத்தில் மறு ஓட்டுப்பதிவு திருமாவளவன் கோரிக்கை

சென்னை : 'சிதம்பரம் தொகுதியில் உள்ள, ஒரு ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு அளித்துள்ளார்.மனுவில், அவர் கூறியிருப்பதாவது:தி.மு.க., கூட்டணியில், சிதம்பரம் தனி தொகுதியில், வி.சி., சார்பில், நான் போட்டியிடுகிறேன். ஓட்டுப்பதிவின் போது, இந்த லோக்சபா தொகுதியில், குன்னம் சட்டசபைக்கு உட்பட்ட, பொன்பரப்பி கிராமத்தில், 281ம் எண் உடைய ஓட்டுச்சாவடி உள்ளது.

அங்கு, ஓட்டுப்பதிவன்று, பகல், 3:00 மணியளவில், பா.ம.க.,வை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.அவர்கள், அருகில் உள்ள ஆதிதிராவிடர்கள் குடியிருப்புக்குள் புகுந்து, வீடுகளை சேதப்படுத்தி உள்ளனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி உள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக, 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டளிக்க முடியாமல் தடுக்கப்பட்டு உள்ளனர். இந்த வன்முறை, பா.ம.க.,வினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.எனவே, அந்த ஓட்டுச் சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, திருமாவளவன் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)