அனுராக் தாக்குரா, ராம்லால் தாக்குரா?

மொத்தம், ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், கடைசி கட்டமாக, மே 19ல், ஹிமாச்சல பிரதேசத்தின், நான்கு தொகுதி களும் தேர்தலை சந்திக்கின்றன. அவற்றில், ஹமிர்புர் தொகுதி தான், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொகுதியில், பா.ஜ., சார்பில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர், அனுராக் தாக்குர், 44,போட்டியிடுகிறார். ஏற்கனவே, மூன்று முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று, நான்காவது வெற்றியை ருசி பார்க்க, மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். லோக்சபாவிலும் இவருக்கு நல்ல பெயர் உள்ளது. அதிக கேள்விகள் கேட்டு, தொகுதிக்கு ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு இவர் சொந்தக்காரர்.

இவரின் தந்தை, பிரேம்குமார் துமல், இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்; பா.ஜ.,வின் முக்கிய தலைகளில் ஒருவர். பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான இவர், தன் தொகுதியில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த, பல ஏற்பாடுகளைசெய்துள்ளார்.தர்மசலாவில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியம், இவர் புகழை பாடிக் கொண்டிருக்கிறது.

அதுபோல, நடமாடும் மருத்துவமனையை துவக்கி, மலைப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, இலவச சிகிச்சை அளித்து வருகிறார். அதே நேரத்தில், தொகுதி பக்கமே வரவில்லை; டில்லியிலேயே இருக்கிறார் என்ற புகாரும் இவர் மீது உள்ளது.அதை சமீப காலமாக, டில்லிக்கே செல்லாமல், ஹமிர்பூர் தொகுதியிலேயே தங்கி, ஓட்டுகளை சேகரித்து, புகாரை போக்கடித்து வருகிறார்.

இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், தற்போதைய, எம்.எல்.ஏ., ராம்லால் தாக்குர் நிற்கிறார். அதனால் போட்டி பலமாக உள்ளது. மேலும், இவர் வளர்ச்சியை தடுப்பதற்காக, நான்காவது முறையாக வெற்றி பெற்று விடக் கூடாது என்பதில், பா.ஜ.,வினர் சிலர் தீவிரமாக உள்ளனராம்!

-அஸ்வனி சர்மா -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)