அசாமின் பார்பேடா தொகுதி யார் வசம் செல்லும்?

மொத்தம், 14 லோக்சபா தொகுதிகளை உடைய அசாம் மாநிலத்தில், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இம்மாதம், 23ல், இறுதி கட்டமாக தேர்தலை சந்திக்கும் மூன்று தொகுதிகளில், பார்பேடாவும் ஒன்று. இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.,யாக இருப்பவர், 'சென்ட் கிங்' என அழைக்கப்படும், பிரபல நறுமண வியாபாரி, மவுலானாபத்ருதீன் அஜ்மல்.

விட்டுக் கொடுத்து:
அசாமை பூர்வீகமாக கொண்ட இவர், மீண்டும், இந்த தொகுதியை தனது, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்ற வேண்டும் என, துடிக்கிறார். ஆனால், வேட்பாளர் அவரில்லை. அவருக்கு பதில், ரபிகுல் இஸ்லாம் போட்டியிடுகிறார்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியை, பா.ஜ., தன் கூட்டணி கட்சியான, அசோம் கன பரிஷத்திற்கு விட்டுக் கொடுத்துள்ளது.

கடந்த, 1985 வரை இந்த தொகுதி, காங்கிரஸ் கோட்டையாகத் தான் இருந்தது.அதை, தகர்த்தவர், அசோம் கன பரிஷத்தின் சார்பில் போட்டி யிட்ட, முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரி, அடாவுர் ரஹ்மான். அதற்குப் பிறகு, இரண்டு முறை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த தொகுதியை கைப்பற்றியது.நாட்டின், ஐந்தாவது ஜனாதிபதி, பக்ருதீன் அலி அஹமது, இந்த தொகுதியிலிருந்து, காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்த தொகுதியில், இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

அதுபோல, மிகவும் குறைந்த வயது பெண் எம்.பி., என்ற பெருமைக்கு உரிய, ரேணுகா தேவி பர்கடாகி, 1962ல் இந்த தொகுதியிலிருந்து தான் தேர்ந்தெடுக்கப் பட்டார்.இந்த லோக்சபா தொகுதில், பத்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில், நான்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அதனால், அந்த நான்கு சட்டசபை தொகுதிகளிலும், குடியுரிமை சட்ட மசோதாவை முன்வைத்து, பாஜ.,வுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்யப்படுகிறது.பா.ஜ.,வின் கூட்டணி கட்சி யான, அசோம் கன பரிஷத், குமார் தீபக் தாசை நிறுத்தியுள்ளது. இவர், முன்னாள், மாநில அமைச்சர். காங்கிரஸ் சார்பில், அப்துல் காலிக் நிற்கிறார். மூன்று முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அப்துல் காலிக், முன்னாள், பத்திரிகையாளர்.

காங்கிரசும், சென்ட் மன்னர் கட்சியும், குடியுரிமை மசோதாவை மையமாக வைத்துபிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அசோம் கன பரிஷத்தும், துவக்கத்தில் அந்த மசோதாவை எதிர்த்தது. அதன் பிறகு, பா.ஜ., கூட்டணிக்கு வந்த பிறகு, கொள்கையை மாற்றிக் கொண்டது.

முஸ்லிம்கள்:
இதுவரை இந்த தொகுதியிலிருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், ஐந்து பேர் தவிர, பிறர் முஸ்லிம்கள் தான்.கடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளைப் பார்க்கும் போது, வெற்றி பெற்ற, சென்ட் மன்னர் கட்சிக்கு, 3.94 லட்சம் கிடைத்தது. இரண்டாவது வந்த, பா.ஜ.,வுக்கு, 3.52 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. அசோம் கன பரிஷத்திற்கு, 73 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன.எனவே, இந்த முறை, அசோம் கன பரிஷத், பா.ஜ., கூட்டணிக்கு வந்துள்ளதால், அதன், 73 ஆயிரம் ஓட்டுகளும், பா.ஜ.,வின், 3.52 லட்சத்திற்குகூடுதலாக கிடைத்து, வெற்றி பெறும் என, நம்பிக்கை கொண்டு உள்ளது.இந்த மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்த சோனோவால் முதல்வராக உள்ளார்.

- சமுத்ரகுப்த கஷ்யப் -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)