இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை : தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெயர்கள் இன்று (ஏப்.22) அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதி இடைத்தேர்தல் மே 19 ல் நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்கள் அ.தி.மு.க., சார்பில் பெறப்பட்டு, நேர்காணல் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., முன்னிலை வகித்தார். நேர்காணல் முடிந்த பின் இ.பி.எஸ்., தெரிவித்ததாவது:இலங்கையில் நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்தியா உதவ வேண்டும். இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர்கள் இன்று(ஏப்.22) வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)