லாலு கட்சிக்கு இன்னொரு, 'மாஜி' வேட்டு

பீஹார், மதுபானி தொகுதியில், பா.ஜ., கூட்டணிக்கு எதிராக, காங்., அமைத்துள்ள கூட்டணிக்கு எதிராக, இரண்டு முன்னாள், மத்திய அமைச்சர்கள் திரும்பி உள்ளனர். அதனால், பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பு, பிரகாசமாகிஉள்ளது.

பீஹாரில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து, மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில், காங்கிரசின் ஓட்டு வங்கி அதிகம் உள்ள, மிதிலாஞ்சல் லோக்சபா தொகுதி, கூட்டணியில் இடம் பெற்றுள்ள, விகாஷ்சீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அதனால், கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்காக, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின், இரண்டு முக்கிய நிர்வாகிகள், திடீரென வெளியேறி, சுயேச்சையாக வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்; இருவரும், முன்னாள், மத்திய அமைச்சர்களாவர்.

தங்களுக்கு, தேர்தலில் போட்டியிட, 'சீட்' தரவில்லை என புகார் கூறி, காங்கிரசை சேர்ந்த, அகில இந்திய செய்தி தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஷகீல் அகமது பதவி விலகியுள்ளார்.அவரை தொடர்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் முன்னாள், மத்திய அமைச்சருமான, அலி அஷ்ரப் பத்மி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகியுள்ளார்.

இதுவரை, காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தும், பா.ஜ.வை எதிர்த்தும் பேசிய, இரண்டு முன்னாள் அமைச்சர்களும், மூலைக்கு மூலை மேடை அமைத்து, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக, வெளுத்து வாங்கு கின்றனர். மேலும், இருவரும் சுயேச்சை வேட்பாளர்களாகவும், களம் இறங்கிஉள்ளனர்.இருவரும், முஸ்லிம் வேட்பாளர்கள் என்பதால், அவர்களைக் கவரும் வகையில், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளை எதிர்த்து பிரசாரம் செய்கின்றனர்.

அதனால், முஸ்லிம் ஓட்டுகள் பிரிந்தால், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு தோல்வி நிச்சயம் என்ற நிலை உள்ளது.அதனால், மற்ற பிரிவினரின் ஓட்டுகளை பெற்று, பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்பார்க்காத, காங்., கூட்டணி தலைவர்கள், நிலைமையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)