மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் சத்ரா தொகுதி; 5 ஆண்டு மாயமான எம்.பி., அச்சம்

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில், ஐந்தாண்டுகள் தொகுதி பக்கமே வராத, எம்.பி., மீண்டும் பிரசாரத்துக்கு வர முடியாமல் தயங்குகிறார். அதனால், பா.ஜ., மேலிடம் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

ஜார்க்கண்டில் உள்ள, 14 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும், 29 முதல், நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், சத்ரா லோக்சபா தொகுதிக்கு, ஏப்., 29ல் தேர்தல் நடக்கிறது.இந்த தொகுதி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிவப்பு அபாய குறியீட்டு பட்டியலில் உள்ளது. தலித் மக்கள் அதிகம் வசிப்பதால், இந்த தொகுதி தனி தொகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 14 முறை லோக்சபா தேர்தல் கள் நடந்துள்ளன. அவற்றில், பா.ஜ., மூன்று; ராஷ்ட்ரீய ஜனதா தளம் இரண்டு; ஜனதா தளம் இரண்டு; காங்கிரஸ் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை, ஜனதா கட்சி, சுதேந்திரா உள்ளிட்ட கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.தற்போதைய, எம்.பி., - பா.ஜ.,வை சேர்ந்த, சுனில் குமார் சிங், 2014 தேர்தலில், காங்., வேட்பாளர், தீரஜ் சாஹுவை, 1.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று சென்றவர், மீண்டும் தொகுதி பக்கம், தற்போது தான் தலைகாட்டியுள்ளார்.

ஏற்கனவே, உள்கட்டமைப்புகளில் பின்தங்கி காணப்படும், இந்த தொகுதியில், வனப்பகுதிகள் நிறைந்துள்ளன. மாவோயிஸ்டுகளின் முழு கட்டுப்பாட்டில் இங்குள்ள வனப்பகுதிகளும், குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், ஓட்டு மட்டும் வாங்கி விட்டு, ஐந்து ஆண்டுகள் தொகுதி பக்கம் வராத, எம்.பி., மீண்டும் எப்படி ஓட்டு கேட்டு செல்வது என, அச்சத்தில் உள்ளார்.போலீஸ் மற்றும் துணை ராணுவ படையின் பாதுகாப்பு வேண்டுமென அவர் கேட்டுள்ளார். ஆனால், போலீசும், கிராமங்களுக்குள் நுழைய மறுத்த விட்டது. அதனால் எப்படி பிரசாரம் செய்வது என, வேட்பாளரும், மாநில பா.ஜ., நிர்வாகிகளும் தவிக்கின்றனர்.

- கன்ஹையா பெலாரி -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)