தி.மு.க., மீது அ.தி.மு.க., புகார்

சென்னை : 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொடிக்கம்பங்களில் தி.மு.க. கொடிகளை பறக்க விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட வேடல் மற்றும் பொன்னேரிக்கரையில் மூடப்பட்டிருந்த தி.மு.க. கல்வெட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. கழற்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள், நடப்பட்டு தி.மு.க. கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படாத நிலையில் தி.மு.க.வினர் மேற்கொண்ட நடவடிக்கை தேர்தல் விதி மீறலாகும். எனவே சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள கொடிகளையும் கொடி கம்பங்களையும் அகற்ற மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் விதியை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)