குன்றத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்., 22) துவங்குகிறது. இத்தொகுதியில் 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவேலு உடல் நலக்குறைவால் காலமானார். அதையடுத்து அந்தாண்டு நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் போஸ், தி.மு.க., வேட்பாளர் சரவணன் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற போஸ் கடந்தாண்டு இறந்தார். போஸ் வெற்றியை எதிர்த்து சரவணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போஸ் வேட்பு மனு செல்லாது என அறிவித்தது.
இந்நிலையில் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கி ஏப்., 29 வரை நடக்கிறது. தினமும் காலை 11:00 முதல் பகல் 3:00 மணி வரை மனு தாக்கல் நடக்கும். சனி, ஞாயிறு விடுமுறை. இதற்காக தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100 மீட்டர் வரை அரசியல் கட்சி வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம், உதவி அலுவலர்களாக நாகராஜன், அனீஷ் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 30 வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி பட்டியல் மாலை வெளியிடப்படும். மே 2 வேட்பு மனுக்களை வாபஸ் பெற இறுதி நாள். மே 19 ஓட்டுப்பதிவு நடக்கிறது. மே 23 லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்களுடன், இந்த தொகுதியில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்படும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)