தேர்தலால் தவிக்கும் மம்தா

புதுடில்லி: மேற்கு வங்க மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், எதற்கு ஏழு கட்ட தேர்தலை அறிவித்தனர் என, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எரிந்து விழுகிறார். காரணம், தேர்தல் பிரசாரத்திற்காக அங்குமிங்குமாக சுற்ற வேண்டியிருப்பது தான்.

மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய, மம்தாவிற்கு ஹெலிகாப்டர் தேவைப்பட்டது. ஆனால், அது கிடைக்கவில்லை.நம் நாட்டில், மொத்தமாக, 250 தனியார் ஹெலிகாப்டர்கள் தான் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவற்றை பா.ஜ., முந்திக்கொண்டு, 'புக்' செய்துவிட்டது. மிச்சம், மீதியிருந்ததை காங்கிரசும், மற்ற கட்சிகளும் வளைத்து விட்டன.தவிர, இதில் இன்னொரு பிரச்னையும் உள்ளது. முன்பெல்லாம், ஹெலிகாப்டர் புக் செய்ய, கட்டணத்தை ரொக்கமாக கொடுக்கலாம். இதன்மூலம், குறைந்த வாடகையை, கணக்கில் காட்டலாம். ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டது. கட்டணத்தை, 'செக்' அல்லது 'ஆன்லைன் டிரான்ஸ்பர்' மூலமாகத்தான் செலுத்த முடியும். இதனால், கறுப்புப் பணத்தை பயன்படுத்த முடியாத நிலை.
உடனே, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு உதவியை, தேடி ஓடினார் மம்தா. 'ஆந்திராவில் தான் தேர்தல் முடிந்துவிட்டதே; நீங்கள் உபயோகித்த ஹெலிகாப்டரை எனக்கு கொடுங்கள்' என்றாராம். ஆனால், நாயுடுவோ, 'தேர்தல் முடிந்தாலும், மற்ற மாநிலங்களுக்கு, நான் பிரசாரம் செய்யவிருக்கிறேன்; இப்போதைக்கு தர முடியாது' என, கைவிரித்துவிட்டாராம்.
எப்படியோ போராடி, மம்தாவிற்கு, ஒரு ஹெலிகாப்டர் கிடைத்தது. அப்பாடா என, பிரசாரம் செய்ய அதில் கிளம்பி சென்றார். பிரசாரம் முடிந்த பிறகு, ஹெலிகாப்டர் கிளம்பாமல், 'மக்கர்' செய்ய, கடுப்பாகி விட்டார் மம்தா. வேறு வழியின்றி, காரிலேயே திரும்பினார் மம்தா.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)