குளித்தலையில் ஓட்டுப்பதிவு அதிகம்

சென்னை, லோக்சபா தேர்தலில், அதிகபட்சமாக, குளித்தலை சட்டசபை தொகுதியில், 85.77 சதவீதம் ஓட்டு கள் பதிவாகி உள்ளது.தமிழகத்தில், வேலுார் தவிர, 38 லோக்சபா தொகுதிகளுக்கு, நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. தேர்தலில், அதிகபட்சமாக, பெரம்பலுார் தொகுதிக்குட்பட்ட, குளித்தலை சட்டசபை தொகுதியில், 85.77 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தர்மபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, பாலகோடு சட்டசபை தொகுதியில், 85.63; கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதியில், 84.22 சதவீதம் ஓட்டு கள் பதிவாகி உள்ளன.குறைந்தபட்சமாக, தென் சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட, மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், 54.78; சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், 55.17; ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, தாம்பரம் சட்டசபை தொகுதியில், 56.30 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)