சரத்பவாரை மாற்றிய ராகுலின் போன்

புதுடில்லி: ராகுல் ஒரு போன் செய்தார். உடனே தனது முடிவை மாற்றினார் தேசியவாத காங்., தலைவர் சரத் பவார். குஜராத்தில் ஏப்.23ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அங்கு உள்ள 26 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த சரத் பவார் முடிவு செய்திருந்தார். இதனால் பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகள் பிரியும் அபாயம் இருப்பதாக ராகுல் நினைத்தார். உடனே சரத்துக்கு போன் செய்த ராகுல், குஜராத்தில் போட்டியிடாமல் இருக்க முடியுமா என்று கேட்டார்.


சரத்தும் அதற்கு ஒப்புக்கொண்டு குஜராத்தில் யாரையும் தங்கள் கட்சி சார்பில் நிறுத்த வேண்டாம் என்றும் அனைத்து தொகுதிகளிலும் காங்., வேட்பாளர்களை ஆதரிக்குமாறும் அம்மாநில கட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டார். சுயேச்சையாகவும் யாரும் போட்டியிடக் கூடாது என்றும் கண்காணிக்கப்படுகிறது.

2017 சட்டசபை தேர்தலில் குஜராத்தில் 6 தொகுதிகளில் காங்., மற்றும் தே.காங்., இடையே உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதன் பிறகு இப்போது தான் இரு கட்சிகளும் நெருங்கி வந்துள்ளன.ஏற்கனவே மகாராஷ்டிராவில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)