ஏப்., 21ல் அதிமுக விருப்ப மனு

சென்னை: 4 தொகுதிகளுக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை மறுநாள் (ஏப்.,2 1) விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: மே 19 அன்று நடைபெற உள்ள சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ஏப்., 21 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம். கட்டண தொகையாக ரூ.25 ஆயிரத்தை அன்றே செலுத்தி விருப்ப மனுவை பூர்த்தி செய்து அன்றே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)